சப்பாத்தி செய்ய இனி மாவு பிசைந்து, கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டும் என்ற எந்த கஷ்டமும் கிடையாது. 10 நிமிஷத்துல கஷ்டப்படாம இந்த சப்பாத்தியை, இனிமே செஞ்சுக்கலாமே.

liquid-chapathi
- Advertisement -

சப்பாத்தி செய்ய இனி கஷ்டப்பட்டு மாவு பிசைந்து, உருண்டை பிடித்து வைத்து, தேய்த்து சுட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. சுலபமான முறையில் தோசை சுடுவது போல உங்கள் வீட்டில், எத்தனை பேர் இருந்தாலும் சாஃப்டான சப்பாத்தியை, செய்து அசத்தி விடலாம். இந்த லிக்விட் ரொட்டியை எப்படி செய்வது என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இன்று இரவே உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள்! நீங்கள் சைவத்தில் கிரேவி செய்தாலும் சரி, அசைவத்தில் கிரேவி செய்தாலும் சரி இந்த சப்பாத்திக்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. உங்களுக்கு பிடித்திருந்தா, கட்டாயமா ட்ரை பண்ணி பாருங்க.

Chapathi maavu

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு – 1 கப், மைதா மாவு – 1 கப், சர்க்கரை – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் முதலில் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு 2 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி இந்த மாவைக் கரைத்தால் சரியாக இருக்கும்.

- Advertisement -

1 கப் மாவு என்பது 250 கிராம் அளவுக்கு, இந்த குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. மொத்தமாக இதில் கோதுமை மாவையும் மைதா மாவையும் சேர்த்து 500 கிராம் அளவு  மாவிற்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த கப்பில் மாவை அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, அந்தக் கப்பில் 2 1/2 கப் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

liquid-chapathi1

முதலில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி மாவு கட்டிப்படாத பக்குவத்தில் கலந்த பின்பு தான், மொத்த தண்ணீரையும் ஊற்றி கரைக்க வேண்டும். இறுதியாக ஒரு 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பில் நான்ஸ்டிக் கடாய் அல்லது இரும்பு கடாய் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். கல் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து, கல்லில் ஊற்றி மெதுவாக தேய்க்க வேண்டும். கோதுமை மாவு தோசை போல பக்குவமாக தேய்த்து விடுங்கள். ரொம்பவும் மெல்லிசாக தேய்த்து விடாதீர்கள். கொஞ்சம் தடிமனாக இருந்தால் தான் சப்பாத்தி ஊம்பி எழுந்துவரும்.

liquid-chapathi2

மாவை ஊற்றி தைத்த பின்பு அடுப்பின் தீயை சிம்மில் இருந்து, மிதமான தீயில், மாற்றி வைத்துக் கொள்ளலாம். தோசையின் மேல் பக்கம் நன்றாக வெந்த பின்பு, தோசையை மெதுவாக திருப்பி போட வேண்டும். இப்போது சப்பாத்தி பதத்தில் மாவு உங்களுக்கு கிடைத்திருக்கும். மேலே முட்டை முட்டையாக பபில்ஸ் வர ஆரம்பிக்கும். ஒரு கரண்டியை வைத்து மெதுவாக அழுத்தி கொடுத்து, சப்பாத்தி திருப்பி போடுவது போல இரண்டு பக்கமும் திருப்பி கொடுத்து கொண்டே இருந்தால், சப்பாத்தி உப்பி வரத்தொடங்கும்.

- Advertisement -

liquid-chapathi3

நன்றாக அழுத்தி மாவை வேக வைத்து, எடுத்தால் சூப்பர் சப்பாத்தி தயார். இந்த சப்பாத்திக்கு மேலே தேவைப்படுபவர்கள் எண்ணெய் அல்லது நெய் தடவி பரிமாறிக்கொள்ளலாம். இப்படியாக ஒவ்வொரு கரண்டி மாவை ஊற்றி சுலபமாக சாஃப்ட்டான இந்த சப்பாத்தியை ஒருவரால் மட்டுமே செய்து விட முடியும். இனி சப்பாத்தி தேய்க்க ஒருவர். சப்பாத்தியை கடாயில் போட்டு எடுக்க ஒருவர், என்று சிரமப்பட வேண்டாம். கொஞ்சமான அளவுகளில் மாவைப் போட்டு கலந்து, உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

liquid-chapathi4

கோதுமை மாவு மட்டுமே வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் கோதுமை மாவில் மட்டும் கூட இந்த சப்பாத்தியை செய்யலாம். மைதாமாவு மட்டும் தனியாக தேவை என்பவர்கள் இந்த சப்பாத்தியை வெறும் மைதா மாவை வைத்தும் முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
இனி இந்த செடியை எங்கு பார்த்தாலும், உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்துடுங்க! அப்படி என்னதா இந்த செடிக்குள் ரகசியம் அடங்கி இருக்குதுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -