- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரே மாதிரி தோசை சாப்பிடாமல் ஆரோக்கியமாக இப்படி ஒரு முறை மணத்தக்காளி கொண்டு கீரை தோசை...

ஒரே மாதிரி தோசை சாப்பிடாமல் ஆரோக்கியமாக இப்படி ஒரு முறை மணத்தக்காளி கொண்டு கீரை தோசை 10 நிமிஷத்துல செஞ்சு பாருங்க, குழந்தைகள் கூட அடிக்கடி கேட்பாங்க!

- Advertisement -

எப்பொழுதும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு வெறுத்து போனவர்களுக்கு இது போல ஆரோக்கியமான முறையில் கீரை கொண்டு செய்யப்படும் தோசை ரொம்பவே பிடித்து போய்விடும். வாரம் ஒரு முறையாவது இந்த மாதிரி கீரை கலந்து தோசை செய்து பாருங்கள், ஆரோக்கியமும் பலப்படும். அடிக்கடி கீரை சமைக்க முடியாதவர்களும் இது போல மணத்தக்காளி கீரையை தோசையாக செய்து சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை தோசை சுவையாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மணத்தக்காளி கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 5, இஞ்சி – 2 இன்ச், பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, மணத்தக்காளி கீரை – ஒரு கைப்பிடி, தோசை மாவு – தேவையான அளவு.

- Advertisement -

மணத்தக்காளி கீரை தோசை செய்முறை விளக்கம்:
முதலில் கீரை தோசை செய்வதற்கு மணத்தக்காளி கீரையை ஒரு கைப்பிடி முழுவதுமாக நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து லேசாக பொரிய விடுங்கள். இவை பொரிந்து வரும் பொழுது ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸில் எடுத்தால் போதும். எந்த அளவிற்கு பூண்டு எடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு சரிசமமாக இஞ்சியையும் தோல் நீக்கி எடுத்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் இதனுடன் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள்.

- Advertisement -

நன்கு இவை வதங்கிய பின்பு நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேர்த்து சுருள வாதக்கி விட வேண்டும். ஒரு நிமிடம் வதக்கினாலே கீரை சுருண்டு விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். பின்னர் நன்கு ஆறியதும், இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரணமான தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அல்லது அடைக்கு தோசை மாவு அரைத்து இருந்தாலும், அதிலும் இதை கலந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி சுரைக்காய் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க!

பின்னர் எப்பொழுதும் போல தோசை கல்லை காய வையுங்கள். மெலிதாக மொறுமொறுவென்று வர தோசை மாவை பரப்பி விடுங்கள். சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு பொன்னிறம் ஆனதும் எடுத்து திருப்பி போடுங்கள். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுலபமாக கொஞ்சம் கூட பச்சை வாசம் தெரியாமல் சூப்பரான, ஹெல்தியான மணத்தக்காளி கீரை தோசை ரெசிபி ரெடி! இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டில் செஞ்சு பாருங்க, குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.

சற்று முன்