அடையார் ஆனந்த பவன் கார கொழுக்கட்டையை அதே சுவையுடன் வீட்டிலும் ரொம்ப எளிமையா இப்படி செய்து குடுங்க. இதை நீங்க தான் வீட்ல செஞ்சேன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க டேஸ்ட் அப்படி இருக்கும்.

kara kozhukattai
- Advertisement -

நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் பாரம்பரியமான உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் அதில் இந்த குழிப்பணியாரம், கொழுக்கட்டை அடை போன்றவற்றை சொல்லாம். இவையெல்லாம் நம் சாதாரணமாக எப்போதும் வீட்டில் இட்லி தோசை செய்வது போல யாரும் செய்வது கிடையாது. இதை செய்வதற்கென்று தனி கைப்பக்கவமும் அதற்கான நேரமும் வேண்டும். இதனாலேயே இது போன்ற உணவுகள் ஹோட்டல்களில் பிரசித்தி பெற்ற உணவாக மாறி விட்டது. அப்படி ஒரு பிரசித்தி பெற்ற ஹோட்டல் உணவான காரப் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த கொழுக்கட்டை செய்ய முதலில் பவுலில் ஒரு கப் இட்லி அரிசி ரவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இது நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் ரவை கிடையாது. இந்த ஒரு கப் ரவைக்கு அரை கப் பச்சரிசி மாவை சேர்த்து கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொறரிந்தவுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்த பிறகு ஒரு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு இன்ச் அளவு இஞ்சியும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயமும் சேர்த்து பருப்புகளின் நிறம் மாறும் வரை வதக்கி விடுங்கள்.

அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எந்த நேரத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயும் இதில் சேர்க்கலாம். சுவை இன்னும் நன்றாக இருக்கும். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த கொழுக்கட்டைக்கு தண்ணீரின் அளவு மிக முக்கியம் ஒரு கப் ரவைக்கு இரண்டு அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து அரை கப் அரிசி மாவிற்கு ஒரு கப் அளவு தண்ணீர், மொத்தமாக நாம் மூன்று அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்த ரவை பச்சரிசி மாவை சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து விட்டு மெதுவாக கொட்டி கிண்ட வேண்டும். இது தண்ணீர் மொத்தமாக சுண்டி வரும் வரை கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள் இது அப்படியே ஆறட்டும்.

இந்த நேரத்தில் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதற்குள்ளாக கலந்து வைத்த மாவு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உங்களுக்கு தேவையான வடிவில் உருண்டையாகவோ அல்லது கொழுக்கட்டை போலவோ பிடித்துக் கொள்ளுங்கள். ஆனால் அனைத்தும் ஒரே அளவில் இருப்பது போல பிடித்து இட்லி பாத்திரத்தில் தட்டு வைத்து இந்த கொழுக்கட்டையை மேலே வைத்து வேக விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு போண்டா செய்யப் போறீங்களா? அப்போ ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க. நீங்க சுட்டு முடிகிறதுக்குள்ள எல்லாமே காலி ஆயிடும்.

இதை வைக்கும் போதும் ஒன்றின் மேல் ஒன்று படாதவாறு தனித்தனியாக வைத்து வேக விடுங்கள். இது ஐந்து நிமிடம் வெந்தாலே போதும். ஏனெனில் நாம் மாவை ஏற்கனவே வேக வைத்து எடுத்து வைத்திருக்கிறோம்.ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து கொழுக்கட்டைகளை தனியாக தட்டில் வைத்து பரிமாறுங்கள். இத்துடன் கார சட்னி, தக்காளி சட்னி வகைகளை வைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும் மிஸ் பண்ணாம இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -