தொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்

Guru astrology

ஒரு மனிதன் எப்படி கடினமாக உழைத்தாலும் கூட அவனுக்கு அவன் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறதோ அதற்கேற்ற பலன் தான் அவனுக்கு கிடைக்கும். ஜோதிட சாத்திரத்தின் படி “சந்திரன், குரு மற்றும் சுக்கிரன்” ஆகிய இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே நன்மைகள் அதிகம் செய்யும் கிரகங்கள் ஆகும். இந்த மூன்று கிரகங்களுக்கும் தொடர்புடைய “அமல” யோகத்தை பற்றி இங்கு காண்போம்.

astrology

ஜாதகத்தில் “சந்திரன்” கிரகம் எந்த ஒரு வீட்டில் இருந்தாலும், அந்த சந்திரன் இருக்கும் வீட்டிற்கு பத்தாவது வீட்டில் “குரு” அல்லது “சுக்கிரன்” கிரகம் இருந்தால் அவர்களுக்கு இந்த “அமல யோகம்” ஏற்படுகிறது. அதே போல லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. உதாரண ஜாதக கட்டம் கீழே உள்ளது.

Amala yogam

மேலே உள்ள ஜாதக கட்டத்தை பார்த்தோமானால் சந்திரனுக்கு பத்தாவது வீட்டில் குரு இருப்பதால் இது அமல யோகம் உள்ள ஜாதகம் என்று கூறலாம்.

அமல யோகம் பலன்கள்

அமல யோகத்தில் பிறந்த ராசியினர் அழகிய முகத்தோற்றத்தையும் நல்ல உடலமைப்பையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்து விதமான கலைகளின் மீதும் ஆர்வம் இருக்கும். ஒரு சில கலைகளை தாங்களாகவே சுயமாக கற்று அதில் தேர்ச்சி அடைவர். ஜோதிடம் மற்றும் அமானுஷ்ய கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். அது குறித்து ஆராய்ச்சிகள் செய்வர். இனிப்பு அதிகமுள்ள உணவுகளை விரும்பி உண்பர். ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதை மிகப்பெரும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் திறன் இருக்கும்.

astrology

- Advertisement -

பயணங்களில் விருப்பமுடையவர்கள். அடிக்கடி வெளியூர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வார்கள். புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இவர்களிடம் எப்போதும் இருக்கும். கல்விதுறையில் ஈடுபட்டால் எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடிய பல நற்காரியங்களை செய்வர். மக்கள் வசியம் நிறைந்தவர்கள் என்பதால் அரசியலில் ஈடுபடும் சூழ்நிலை உண்டானால் அதில் எதிர்காலத்தில் மிகப்பெரும் பதவிகளை அடையும் அதிர்ஷ்டம் உண்டு. கோவில் சம்பந்தமான காரியங்களில் விரும்பி ஈடுபடுவர். பல கோவில்களை புனரமைத்து அதற்கு குடமுழுக்கு செய்யும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கும். நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல யோகங்கள் மற்றும் ஜாதகம் பார்ப்பது எப்படி என்று அறிய விரும்புவோர் எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have described the Amala yogam in Tamil. If one have this yoga then he will lead a good life and gain a good public suport