கண் திருஷ்டி விலக, அமாவாசை திதியில் திருஷ்டி கழிக்கும் முறை.

amavasai1
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி நீங்க வேண்டும் என்றால் மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் கட்டாயம் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு திஷ்டி கழித்தே ஆக வேண்டும். அமாவாசை திதியில் திருஷ்டி சுற்றி போடும்போது நம்முடைய குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி ஆனது விலகி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதைத்தான் இன்றைய நாள் வரை நாம் பின்பற்றியும் வருகின்றோம். அந்த வகையில் இந்த மாசி மாதத்தின் அமாவாசை திதியானது எந்த நேரத்தில் பிறக்கின்றது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலையும், அமாவாசை நாளில் வீட்டில் இருப்பவர்களுக்கு திஷ்டி கழிக்க கூடிய ஒரு சுலபமான முறையைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

அமாவாசையில் திருஷ்டி கழிக்கும் முறை

09-03-2024 சனிக்கிழமை மாலை 6:09 மணிக்கு அமாவாசை திதியானது பிறக்கின்றது, 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:40 மணி வரை இந்த அமாவாசை திதி இருக்கிறது. சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அமாவாசை திதி பிறக்க இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின் போதே முன்னோர்களுக்கான திதி தர்ப்பணங்களை முடித்து விடுங்கள். மதியம் 12:00 மணிக்கு வழக்கம் போல முன்னோர்களுக்கு இலை போட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம். மறக்காமல் காகத்திற்கு உணவு வைத்து விட்டு நீங்க சாப்பிடுங்க.

- Advertisement -

கண் திருஷ்டி நீக்க திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்று நினைப்பவர்கள், சனிக்கிழமை இரவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சனிக்கிழமை இரவு இந்த பரிகாரத்தை தவறவிட்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த திருஷ்டி சுற்றும் பரிகாரத்தை செய்தால் தவறு கிடையாது.

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்துக்கோங்க. கருப்பு புள்ளிகள் இருக்கக்கூடாது மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். நான்கு பாகங்களும் கையில் வரக்கூடாது. அடிபாகம ஒட்டி இருக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தை நான்கு பாகங்களாக நறுக்கி ஒரே பழமாக கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த பழத்துக்கு நடுவே கொஞ்சமாக கல் உப்பு, கொஞ்சமாக சிவப்பு நிற குங்குமம், கடுகு 1 ஸ்பூன் வைத்து, கூடவே 3 வரமிளகாய் எடுத்துக்கோங்க. வரமிளகாயை எலுமிச்சம் பழத்துக்கு உள்ள செட் பண்ண முடியாது. அதனால எலுமிச்சம் பழம் கூட கையில வச்சுக்கோங்க. இந்த எலுமிச்சம் பழம் அதற்கு உள்ளே இருக்கும் பொருட்கள், வரமிளகாயோடு சேர்த்து அப்படியே திருஷ்டி சுற்ற வேண்டும். இதையெல்லாம் ஒரு சின்ன கிண்ணத்துக்குள் செட் பண்ணி அதை அப்படியே திருஷ்டி சுற்றினாலும் தவறு கிடையாது.

வீட்டில் இருப்பவர்களை எல்லாம் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணி, அனைவருக்கும் திருஷ்டி சுற்றி, இதை அப்படியே ஒரு அகல் விளக்கின் மேல் வையுங்கள். அல்லது கொட்டாங்குச்சி இருந்தாலும் அதன் உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் போட்டு, நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் கொண்டு போய் இதை வைத்து இதன் மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து அப்படியே கொளுத்தி விடுங்கள்.

எரிந்த சாம்பலை அப்படியே எடுத்து ஒரு பேப்பரில் கொட்டி மடித்து குப்பையில் போட்டு விடலாம். அவ்வளவுதான். இந்த முறைப்படி அமாவாசை தினத்தில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டால் நிச்சயமாக வீட்டில் இருக்கும் திருஷ்டியும், கழியும். வீட்டில் இருப்பவர்களுக்கு தாங்கி இருக்கக்கூடிய திருஷ்டி தோஷங்களும் விளக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

அமாவாசையில் இந்த முறைப்படி தான் கட்டாயம் திருஷ்டி கழிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களுடைய வீட்டில் திருஷ்டி கழிக்க ஒரு முறை வைத்திருப்பார்கள் அல்லவா, அதை கூட நீங்கள் பின்பற்றலாம் தவறு கிடையாது. ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டில் இருக்கும் திருஷ்டி தோஷத்தை நாம் கழிக்க வேண்டும். அதுவும் இந்த அமாவாசை திதியில். குடும்ப நன்மைக்கு இதை யாரும் மறக்காதீங்க என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -