ஏழரை சனியில் சிக்கி இருப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

sanibagavan
- Advertisement -

சனிபகவான் என்று சொன்னதும் நம் மனதில் ஒரு நடுக்கம் வருகிறதா. அதிலும் ஏழரை சனியில் சிக்கி இருப்பவர்களை கேட்டுப்பாருங்க. சனிபகவானின் விளையாட்டை கதை கதையாக சொல்லுவார்கள். மரணம் வரை சென்று விட்டேன். உயிர் மட்டும்தான் மிஞ்சியது என்று சொன்னவர்கள் எல்லாம் உள்ளார்கள்.

நீங்கள் நேர்மையாக இருந்தால் சனி பகவான் உங்களை என்ன செய்யப் போகிறார். உங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார். சரிங்க நீங்க என்ன சொன்னாலும் என்னுடைய மனது ஏற்றுக் கொள்ளாது. ஏழரை சனி எனக்கு நடக்கிறது. வரக்கூடிய கஷ்டங்களுக்கெல்லாம் சனி பகவான் தான் காரணம் என்று நினைக்கின்றோம்.

- Advertisement -

இதிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழிபாடு உண்டா. ஏதேனும் திருத்தலம் உண்டா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு. சனியால் பாதிப்பு இருக்கு என்று பயப்படபவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க. குறிப்பாக ஏழரை சனியில் சிக்கி இருப்பவர் இந்த கோவிலுக்கு ஒருமுறை போயிட்டு வருவது ரொம்ப ரொம்ப நல்லது.

ஏழரை சனியில் இருப்பவர்கள் செல்ல வேண்டிய கோவில்

ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில் தான் அந்த கோவில். நிறைய பேருக்கு இந்த கோவில் தெரிந்திருக்கும். நிறைய பேருக்கு இந்த கோவிலை பற்றி தெரிந்திருக்காது. இந்த கோவிலில் ஹனுமன், சனி பகவானை காலால் மிதித்தபடி காட்சி தருகிறார். ஆகவே இந்த அனுமனை வழிபாடு செய்யும்போது நமக்கு சனிபகவானால் வரக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாக சனிபகவான் தாக்கத்தை குறைக்க விநாயகர் வழிபாடும், ஹனுமன் வழிபாடும் தான் நமக்கு கை கொடுக்கும். வீட்டிலிருந்தபடி தினசரி விநாயகரை வழிபாடு செய்யுங்கள். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவில் விநாயகர் கோவிலுக்கு தினமும் சென்று கோவிலை வலம் வந்து தோப்பு கரணம் போட்டு வழிபாடு செய்யுங்கள்.

ஒருமுறை நேரத்தை ஒதுக்கி இந்த ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயரையும் போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

சனிபகவானால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. சில பேரால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. காரியத்தடை இருக்கும். சோம்பல் இருக்கும். சுறுசுறுப்பாகவே இருக்க மாட்டாங்க. நல்ல வேலை கிடைத்தாலும் போக மாட்டாங்க. அப்படிப்பட்டவர்களை எல்லாம் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று அந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய சொல்லுங்கள் ஆஞ்சநேயரை பார்த்த உடனேயே உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்பதுதான் இந்த கோவிலுடைய தாத்பரியமே.

இதையும் படிக்கலாமே: இருண்டு போன வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முருகன் வழிபாடு.

வேலூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் ஆம்பூர் என்ற இடத்தில் இந்த பெரிய ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் பெறலாம்.

- Advertisement -