நெல்லிக்காய் ரசம் செய்முறை

amla rasam recipe
- Advertisement -

நெல்லிக்காயில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும். அத்துடன் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெல்லிக்காய் எடுக்கும் பொழுது சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இது மட்டும் இன்றி உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதுடன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது ஒரு அற்புதமான கனி.

நெல்லிக்காயில் நாம் இதுவரை ஜூஸ் குடித்திருப்போம் அல்லது அப்படியே சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த நெல்லிக்காயில் அற்புதமான ஒரு ரசம் வைத்து சாப்பிட முடியும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கும். ஒரு முறை இப்படி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள் இனி எப்போது ரசம் வைத்தாலும் உங்கள் வீட்டில் நெல்லிக்காய் ரசம் தான்.

- Advertisement -

நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி?.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு -1 டீஸ்பூன்,
மிளகு -1/2 டீஸ்பூன்,
சீரகம் -1/2 டீஸ்பூன்,
நான்கு பல் – பூண்டு,
காய்ந்த மிளகாய் – 2,
தக்காளி – 3,
முழு நெல்லிக்காய் – 2,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள்- 1/4 கால் டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுந்து -1/2 டீஸ்பூன்,
எண்ணெய் -2 ஸ்பூன்,
பெருங்காயம் -1/4 கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிதளவு,
கருவேப்பிலை, கொத்துமல்லி ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது .

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து துவரம் பருப்பு மிளகு சீரகம், பூண்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து புளி ஊற வைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்த பொருட்கள் எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் மூன்று தக்காளி இரண்டு நெல்லிக்காய் விதை நீக்கி விட்டு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ரசம் தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடலைக் கறி கபாப் செய்முறை

அதன் பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டை இதில் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு புளி தண்ணீரையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி விடுங்கள். இந்த ரசம் கொதி வரக் கூடாது நுரைத்து வரும் வரை காத்திருந்து இறக்கும் போது துருவிய இஞ்சி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து விட்டு இறக்கினால் அருமையான நெல்லிக்காய் ரசம் தயார்.

- Advertisement -