ஆந்திரா ஸ்டைல் மிளகாய்ச் சட்னி இப்படியும் கூட அரைக்கலாம். இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்.

milagai-chutney
- Advertisement -

ஆந்திரா ஸ்டைலில் ஒரு மிளகாய் சட்னி எப்படி அரைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆந்திராவில் இந்த சட்னி மிகவும் பிரபல்யமானது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த சட்னியை வெறும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இதில் சேர்க்கக்கூடிய பொருட்களும் மிக குறைந்த பொருட்களே. சுடச்சுட பத்தி இட்லியை வைத்து பக்கத்தில் இந்த கார சட்னியை தொட்டுக்கொள்ள வைத்துவிட்டால் போதும். 10 இட்லி நமக்கு பத்தாது என்று தான் சொல்லவேண்டும். சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த மிளகாய் சட்னி ரெசிபியை பார்த்துவிடலாம்.

chutney

முதலில் 10 விருந்து 15 மிளகாய்களை தண்ணீரில் போட்டு, 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காம்பை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு மிளகாய்களை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நன்றாக ஊறிய இந்த மிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். இதோடு 2 கொத்து கறிவேப்பிலை, நெல்லிக்காய் அளவு புளி, பூண்டு 3 பல், இந்த 3 பொருட்களையும் சேர்த்து, மிளகாய் ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி, சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

poondu-chutney1

மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு, கருவேப்பிலை, இந்த 5 பொருட்களை சேர்த்து விழுது போல அரைக்க போகிறீர்கள். அவ்வளவு தான். அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், இவைகளை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய உடன், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் ஊற்றி உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

அடுப்பிலும் எண்ணெயிலும் இருக்கும் சூட்டிலேயே சட்னியை ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடங்கள் அப்படியே கடாயில் சட்னியை விட்டுவிடுங்கள். அதன் பின்பு இந்த சட்னியை, இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறி பாருங்கள். ஆஹா அத்தனை ருசி இது வெறும் மிளகாயை வைத்து அரைக்க கூடிய சட்னி என்பதால், உப்பு புளியை கொஞ்சம் கூடுதலாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணையை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வயிற்றுப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்கும்.

மிளகாய் சட்னி

உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. உங்க வீட்ல நாளைக்கே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. வீட்ல இருக்கிறவங்க அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

- Advertisement -