கடன் பிரச்சனையை தீர்க்கும் அரச இலை தீப பரிகாரம்

arasa ilai deepam
- Advertisement -

ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. அந்த சக்திகளை வைத்து தான் அந்த மரத்திற்குரிய மருத்துவ குணங்கள் ஏற்படுகின்றன. அந்த மருத்துவ குணங்களை பயன்படுத்தி உடல் உபாதைகளை நீக்குகிறோம். உடல் உபாதை மட்டும் அல்லாமல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பல பிரச்சனைகளையும் நீக்குவதற்கு அரச மர இலையை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தன்னுடைய வாழ்நாளில் பல பாவங்களை செய்து அந்த பாவத்தின் விளைவால் கொடிய நோய்க்கு ஆளாகி பல பரிகாரங்களை செய்தும் அந்த பாவத்திலிருந்து விடுபட முடியவில்லை. பிறகு ஒரு சித்தரின் அருளால் பாவ விமோசனம் பெற்று தன்னுடைய நோயிலிருந்து விடுபட்டார். பிறகு சிவபெருமானை நினைத்து தவமிருந்து தனக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் இந்த உலகில் ஏற்படக்கூடாது, தன்னிடம் வரக்கூடிய அனைவருக்கும் பாவ விமோசனம் கிடைக்க வேண்டும் என்று வரம் வாங்கினார். அப்படிப்பட்ட அரசன் தான் அரச மரமாக மாறி இன்றளவும் நம் மக்களின் துயர்களை போக்கும் மரமாக திகழ்கிறார். இந்த அரச மரம் தான் அனைத்து மரங்களுக்கும் அரசனாக விளங்கக்கூடிய மரம்.

- Advertisement -

பொதுவாக ஆற்றங்கரை ஓரங்களில் ஒரு அரச மரமும், அந்த அரச மரத்தடியில் விநாயகரும் வீற்றிருப்பதை நாம் பல இடங்களில் பார்த்து இருந்திருப்போம். அந்த விநாயகரை நாம் வழிபட்டு அரச மரத்தை சுற்றி வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் மிகவும் குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தை காலையில் வலம் வரும் பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டாலும், மருத்துவர் ரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்ட ஒன்றாகவே திகழ்கிறது.

கடன் தீர்க்கும் அரச இலை தீபம் பொதுவாக அரசமரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருக்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த மரத்தின் இலைகளை நாம் நினைக்கும் போதெல்லாம் தொடக்கூடாது. சனிக்கிழமையில் மட்டும் தான் தொட வேண்டும். அதேபோல் சனிக்கிழமையில் மட்டும்தான் மரத்தின் இலைகளை நம் கைகளால் பறிக்க வேண்டுமே தவிர மற்ற நாட்களில் பறிக்கக் கூடாது.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் வீட்டிலும் ஏற்றலாம். அரசமரத்தடியிலும் ஏற்றலாம். இரண்டு தீபங்கள் ஏற்றினால் போதும். அரச மர இலையை சனிக்கிழமை அன்றுதான் பறிக்க வேண்டும். பறித்த அந்த இலைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு அந்த இலைக்கு நான்கு புறமும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு வீட்டில் ஏற்றுபவர்களாக இருந்தால் ஒரு தாம்பாளத்தை வைத்து அதன் மீது இந்த இலையை வைக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து அதில் இனிப்பை எண்ணெயை ஊற்றி பச்சை நிறத்தில் திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

கோயிலில் ஏற்றுவதாக இருந்தால் தாம்பாளம் மட்டும் தவிர்த்து விட்டு வீட்டில் செய்யக்கூடிய அதே வழிமுறைகளை பின்பற்றி தீபம் ஏற்றலாம். இப்படி தொடர்ந்து 16 வாரங்கள் சனிக்கிழமை தோறும் நாம் தீபம் ஏற்றி வழிபட நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். கடன் அடையும். நமக்கு வர வேண்டிய பணமும் நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீங்க தேங்காய் பரிகாரம்

பணரீதியான பிரச்சினைகள் தீர்ந்தாலே நம் வாழ்வில் பலவிதமான நன்மைகள் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து வரலாம்.

- Advertisement -