குலதெய்வ அருள் கிடைக்க அரச மர வழிபாடு.

arasamara valipadu
- Advertisement -

ஒருவர் தன் வாழ்க்கையில் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடுவதற்கு இணையான பலனை பெற முடியாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குலத்தை காக்கக்கூடிய தெய்வம் தான் முதலில் நமக்கு பிரச்சனை என்றதும் வந்து நிற்கும். பிறகு தான் மற்ற தெய்வங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு நபரும் கண்டிப்பான முறையில் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு அரச மரத்தை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பதை நாம் தொடர்ச்சியாக தொன்று தொட்டு செய்து வருகிறோம். வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு நம்மால் இயன்ற அபிஷேக ஆராதனைகளை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அனுதினமும் காலையில் எழுந்ததும் முதலில் குலதெய்வத்தை நினைத்து வணங்கி பிறகுதான் அந்த நாளையே ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு ஏதாவது ஏற்பாடுகள் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தின் பரிபூரணமான அருளை பெற்ற பிறகு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இருக்காது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று காலையில் முடிந்த அளவிற்கு ஆறு மணிக்கு முன்பாகவே இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் அரச மரத்தை தொட்டு வணங்கி விட்டு ஒரு முறை வலம் வர வேண்டும். மறுபடியும் அரச மரத்தை தொட்டு வணங்கி விட்டு மறுபடியும் வலம் வர வேண்டும்.

- Advertisement -

இப்படி மூன்று முறை அரசமரத்தை தொட்டு வணங்கிவிட்டு வலம் வர வேண்டும். பிறகு அந்த அரச மரத்திடம் மனதார நம்முடைய வேண்டுதலை அதாவது குலதெய்வ அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துவிட்டு அரச மரத்திலிருந்து மூன்று இலைகளை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்கு வந்ததும் இந்த இலைகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.

பிறகு அந்த இலைகளுக்கு நடுவில் மஞ்சள் குங்குமத்தை வைத்து “எனக்கும் என் வீட்டிற்கும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொண்டு வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இதை போல் தொடர்ந்து ஆறு வாரங்கள் நாம் செய்து வர குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக நம்மால் பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் கடாட்சமும் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்

மிகவும் எளிமையான இந்த அரச மர வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்க்கையில் குலதெய்வத்தின் அருளும் மகாலட்சுமியின் கடாட்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -