தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்

vinayagar arugampul
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்த காரியம் தடைப்பட்டு அது அப்படியே நின்றுவிடும். மேற்கொண்டு மறுபடியும் நாம் முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் மறுபடியும் தடைகள் ஏற்படும்.

இப்படி தடைகளுக்கு மேல் தடைகள் ஏற்பட்டு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த அருகம்புல்லை எந்த நேரத்தில் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பொருட்களாக சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை வைத்து நாம் அந்த தெய்வத்தை வழிபடும் பொழுது கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். அதிலும் எந்த நேரத்தில் வைத்து வழிபடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

அந்த வகையில் முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஒரு பொருளாக அருகம்புல் திகழ்கிறது. இந்த அருகம்புல்லை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் விநாயகப் பெருமானுக்கு சமர்ப்பிக்கலாம். காரிய தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கான சூட்சும நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களுடைய காரியத்தடை நீங்கும்.

- Advertisement -

இப்படி காரியத்தடை ஏற்பட்டு இருப்பவர்கள் விநாயகப் பெருமானை திங்கட்கிழமை அன்றும், வியாழக்கிழமை அன்றும் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு காரிய தடை ஏற்படுவதற்கு சனிபகவானும், செவ்வாய் பகவானுமே காரணமாக திகழ்கிறார்கள். அதனால் திங்கட்கிழமை அன்று 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் நாம் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல்லை அவருக்கு மாலையாக கட்டிக் கொடுத்துவிட்டு, தேங்காய் உடைத்து அதில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இதே போல் வியாழக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி அந்த காரியம் வெற்றி அடையும். மேலும் இப்படி ஏதாவது ஒரு காரியத்தை செய்வதற்காக நாம் வெளியில் செல்கிறோம் என்னும் பட்சத்தில் விநாயகப் பெருமானுக்கு சமர்ப்பித்த அருகம்புல்லை நம்முடன் எடுத்துச் செல்வதன் மூலமும் காரியத்தடைகள் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி வழிபட்ட பிறகு செய்யக்கூடிய காரியம் வெற்றி அடைந்து விட்டால் விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கி கொடுத்து வழிபட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத பணவரவு ஏற்பட பரிகாரம்

இந்த முறையில் விநாயகப் பெருமானை நம்பிக்கையுடன் நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -