இன்று அத்தி வரதர் தரிசனம் செய்த பிரபல நபர் யார் தெரியுமா?

athi-vardhar

பூமியில் எத்தனை ராஜாக்களும் மக்களை ஆட்சி செய்தாலும், அந்த ராஜாக்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பவர் ரங்கராஜன் எனப்படும் மகாவிஷ்ணு தான் என ஒரு திரைப்பட பாடல் வரியை பலரும் ரசித்திருப்பார்கள். ஆன்மீக பூமியாக இருக்கின்ற தமிழ்நாட்டில் தெய்வ பக்தி நன்கு பரவுவதற்கு ஆன்மீகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் பேருதவி புரிந்தன. ஒரு சில தெய்வீக கதாப்பாத்திரங்களில் நடித்து பல நடிகர்கள் மிகுந்த புகழையும் பெற்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவத்திற்கு வந்த பிரபலமான மனிதர் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டுமே 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரதராஜபெருமாள் விக்கிரகம் வெளியில் எடுக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு 48 நாட்கள் காலை பக்தர்கள் அனைவரும் தினந்தோறும் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அத்தி வரதர் தரிசனம் செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது 2019ஆம் ஆண்டு அத்தி வரதர் தரிசனம் நடைபெறுகிறது. இதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆவது ஆண்டு மட்டுமே காஞ்சிபுரம் குளத்திலிருந்து அத்திவரதர் வெளிவந்து பக்தருக்கு தரிசனம் தருகின்ற வைபவம் நடைபெறும். இன்னும் 40 ஆண்டு காலத்திற்குள் ஒவ்வொருவரின் வாழ்விலும் என்ன நடக்கும் என்பது தெரியாத காரணத்தால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் இப்போது கிடைத்திருக்கின்ற அத்தி வரதர் தரிசனம் வாய்ப்பை தவறவிடாமல் தினந்தோறும் இலட்சக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வருகின்றனர்.

rajini kanth

அத்தி வரதர் தரிசனம் காண சாதாரண மக்கள் மட்டுமல்லாது அரசியல் பிரமுகர்கள், சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் திரண்டு வந்து அத்தி வரதர் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அத்தகைய பிரபலங்களில் பலருக்கும் ஆன்மீகம் மற்றும் தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதில் ஒரு சில புகழ்பெற்ற நபர்கள் மட்டுமே தங்களின் இறை நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

athi varadhar rajini

அத்தகைய பிரபலங்களில் தமிழ் மக்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கின்ற இந்தியர்கள் அனைவராலும் அறியப்பட்ட பிரபல திரைப்பட நடிகர் தான் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”. இன்று அதிகாலை ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் அத்தி வரதர் தரிசனம் தரிசனம் செய்ததோடு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. திரு ரஜினிகாந்த் அவர்கள் திரைப்பட நடிகராக அறிமுகமான ஆரம்ப காலம் முதலே தீவிர இறை பக்தி கொண்டவராக இருந்தார். பொதுவாகவே ஆன்மிகம் மகான்கள், தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் திரு. ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு தனலாபங்கள் பெருக இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English oveview:
Here we have Athi varadhar rajinikanth in Tamil. It is also called as Superstar rajinikanth in Tamil or Athi varadhar in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.