இந்த மோதிரத்தை மட்டும் போட்டு பாருங்க! துரதிஷ்டம், உங்களை கண்டால் தூர ஓடிவிடும். அதிர்ஷ்டம், உங்கள் அருகிலேயே இருக்கும்.

silver-ring2
- Advertisement -

ஒரு மனிதன் வாழ்க்கையில் சுகபோகமாக, ராஜ வாழ்க்கையை வாழ்ந்தால், அவனை அதிர்ஷ்டக்காரன் என்று தான் சொல்லுவார்கள். அதுவே, ஒருவர் வறுமையில் வாடினால், அவனைப் பார்த்து துரதிர்ஷ்டசாலி என்று சொல்லுவார்கள். இந்த துரதிர்ஷ்டம் நம் பக்கத்தில் கூட வரக்கூடாது. அதிர்ஷ்டம் நம்மை விட்டு செல்லவே கூடாது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவோ பரிகாரங்களை செய்திருக்கின்றோம். இதை செய்ய மாட்டோமா? அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள, இதமட்டும் செஞ்சுதான் பாருங்களேன்! ஒரு சிறிய மோதிரம் வாங்கி உங்கள் கைகளில் போட வேண்டும். அவ்வளவுதான், இந்த மோதிரத்தை போட்டால் அப்படி என்னதான் நடக்கும்? அது என்ன அப்படிப்பட்ட மோதிரம்? என்ற சிந்தனை உங்களுக்குள் கட்டாயம் எழும்? அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய அந்த மோதிரம் எது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ring

நிறைய பேருக்கு இந்த மோதிரத்தை பற்றி தெரிந்து கூட இருக்கலாம். தெரியாதவர்கள், தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. இந்த மோதிரத்தை ‘பிரம்ம முடிச்சு மோதிரம்’ என்று சொல்வார்கள். சிலர் இந்த மோதிரத்தை ‘பவித்திர மோதிரம்’ என்று சொல்லுவார்கள். வசதிபடைத்த பலபேர், கைகளில் இதை அதிகமாகவே நம்மால் காணமுடியும். ஏனென்றால் இந்த மோதிரத்திற்கு அவ்வளவு ராசி உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் உள்ள மோதிரம் தான் பவித்திர மோதிரம். இது பலவகையான வடிவங்களில் காலத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே அடுத்தடுத்து உள்ள புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

- Advertisement -

குறிப்பாக, வட இந்தியர்கள், நகைக் கடை முதலாளிகள் இந்த மோதிரத்தை தங்கத்தில் அணிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மால் இந்த மோதிரத்தை தங்கத்தில் வாங்க முடியவில்லை என்றாலும், ஐம்பொன்னால் ஆன மோதிரத்தை அணிந்து கொள்ளலாமே! அல்லது வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். எந்த உலோகத்தால் பவித்திர மோதிரத்தை, நம்முடைய மோதிர விரலில் அணிந்து கொண்டாலும், அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ring1

இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோருமே பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் ஏதேதோ பரிகாரங்களை செய்து பார்க்கின்றோம். இது ஒரு பரிகாரம் கூட இல்லை. மோதிரத்தை அணிந்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. உங்களுக்கு மோதிரத்தை அணிந்து அதிர்ஷ்டம் கிடைக்கும் பட்சத்தில், தொடர்ந்து அணிந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால் மோதிரத்தை கழட்டி விட போகின்றோம். அவ்வளவுதான்.

- Advertisement -

முதலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பவித்திர மோதிரத்தை அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட பவித்ர மோதிரத்தை வாங்கி அணிந்து, சோதித்து தான் பாருங்களேன்! எவ்வளவோ செலவு செய்கின்றோம். அதிர்ஷ்டத்தை தேடித் தரக் கூடிய, சின்ன மோதிரத்திற்கு, ஒரு சிறு தொகையை செலவு செய்து பாருங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தால், பின்பு அந்த மோதிரத்தை தங்கத்தால் மாற்றி போட்டுக் கொள்ளுங்கள்.

ring2

இந்த மோதிரத்தை பற்றிய தகவலே தெரியாதவர்கள், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு, இந்த மோதிரத்தை வாங்கி அணிந்து கொண்டு, அதிர்ஷ்ட காத்து உங்கள் பக்கம் வீசினால் அதுவும் ஒரு வகை அதிர்ஷ்டம் தான். அதிர்ஷ்டமானது யாருக்கு எப்போ, எந்த பக்கம் வரும்னு, யாராலும் சொல்ல முடியாது. அதுதானங்க அதிர்ஷ்டம்! உங்களுக்கு இந்த பதிவின் மூலம், இந்த மோதிரத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்றால், அதை யாராலும் மாற்ற முடியாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆடி மாதம் குலதெய்வத்திற்கு இப்படி விளக்கு வழிபாடு செய்தால் தீராத பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -