எப்பவும் டிபனுக்கு ஒரே மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இது போல செஞ்சு குடுங்க. இது பார்க்கும் போதே எடுத்து சாப்பிடனும் போல இருக்கும். டேஸ்ட்டும் வேற லெவல்.

suji aval balls
- Advertisement -

பொதுவாக நம்முடைய உணவு கலாச்சாரத்தில் காலை டிபன் என்றாலே இட்லி தோசை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அப்படி எப்போதும் ஒரே மாதிரி செய்து கொடுத்தாலும் எல்லோருக்கும் ஒரு சலிப்புத் தட்ட தானே செய்யும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான அதே நேரத்தில் அருமையான ஒரு டிபன் ரெசிபி பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம் வாங்க அந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அவல் ரவை உருண்டை செய்முறை விளக்கம்
இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கப் அவல் எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதற்கு எந்த அவளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் சேர்க்கும் அவலை பொறுத்து ஊற வைக்கும் நேரம் கொஞ்சம் அதிகம் இருக்கும். சிகப்பு அவல் கொஞ்சம் தடிமனாக இருக்கும் அதை ஒரு பத்து நிமிடம் கூடுதலாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை அவல் தட்டை அவலாக இருந்தால் பத்து நிமிடம் போதும்.

- Advertisement -

அவலை சுத்தம் செய்த பிறகு அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொதிக்கும் தண்ணீர் அப்படியே இந்த அவல் ரவை கலந்து வைத்திருக்கும் பவுலில் ஊற்ற வேண்டும். ஊற்றி நன்றாக கலந்து பத்து நிமிடம் தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி அதை இந்த மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மாவை நன்றாக கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். அவல் ரவை எல்லாம் நன்றாக கலந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் இந்த அவல் உருண்டைகளை வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் இதற்கு ஒரு தாளிப்பை தயார் சேர்த்து கொள்வோம். இது தாளிப்பு எதுவும் சேர்க்காமல் அப்படியும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

இந்த தாளிப்பிற்கு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறியவுடன் ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பிறகு வேக வைத்த உருண்டைகளை இதில் சேர்த்து ரெண்டு ஸ்பூன் இட்லி பொடியும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசியிலேயே அருமையான சுவையோடு பாயாசம் தயாரிப்பது எப்படி? ஆடி மாசம் கிராமப்புறங்களில் இந்த பாயாசம் ஃபேமஸ் தெரியுமா?

அவ்வளவு தான் சுவையான அவல் ரவா உருண்டை தயார். இது நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு என்பதுடன் ருசியாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திப்படி வேக வைத்து அப்படியே சாப்பிடலாம். இது போல இட்லி பொடி கலந்து சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை இந்த டிபன் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -