இந்த ஒரு ட்ரிக்ஸ் தெரிஞ்ச போதும் பர்ஃபெக்ட்டான கேரள ஸ்டைல் அவியலை சுலபமாக செய்திடலாம். வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கிட்டு நீங்களும் இந்த அவியலை செஞ்சி அசத்துங்க.

- Advertisement -

ஒவ்வொரு மாநிலத்திற்கென ஒரு பாரம்பரியமான உணவு உண்டு. அந்த வகையில் கேரளாவின் பாரம்பரியமான ஒரு உணவு தான் இந்த அவியல். இப்போது இந்த அவியலை எல்லோரும் செய்கிறார்கள். இருந்தாலும், கேரளாவில் செய்யும் அதே சுவையிலும் அதே மனதுடன் எப்படி நாமும் செய்வது என்பதை தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இப்போது அவியலுக்கு தேவையான காய்கறிகளை என்னென்னவென்று தெரிந்து கொள்ளலாம். கத்தரிக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு கேரட் ,பீன்ஸ், வெண்பூசணி. இந்த காய்கறிகள் தான் அவியலுக்கு முக்கியமாக பயன்படுத்துவார்கள். உங்களுக்கு வேறு காய்கறிகள் சேர்க்க விருப்பம் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரளா சுவையில் செய்ய இந்த காய்கறிகள் அவசியம்.

- Advertisement -

ஒவ்வொரு காயும் கால் கப் இருக்கும் படி எடுத்து கொள்ளுங்கள். இந்த காய்கறிகளை அரை இன்ச் அளவிற்கு எல்லாவற்றையும் ஒரே மாதிரி நறுக்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் அவியல் செய்யும் போது காய்கள் ஒரே மாதிரி வெந்து வருவதோடு பார்க்கவும் அழகாக இருக்கும். நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் பூசணிக்காய் தவிர்த்து மற்ற காய்கறிகளை ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிலிம் வைத்து மூடி வைத்து வேக விடுங்கள். இந்த காய்களில் இருந்து விடும் தண்ணீரிலே காய்கள் வெந்து விடும் தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த காய்கள் 50 சதவீதம் வரை வெந்தவுடன், எடுத்து வைத்திருக்கும் பூசணிக்காயும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். சேர்த்த பிறகு மறுபடியும் மூடி போட்டு அப்படியே வேக விடுங்கள் இது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இந்த அவியலுக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்வோம்.

- Advertisement -

இதற்கு அரை முடி தேங்காய் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவி எடுக்கும் போது மேலே கருப்பு தோல் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் நான்கு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் சீரகம், இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரைத்த இந்த தேங்காய் விழுதை வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளில் கொட்டி ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கால் கப் அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து, இன்னும் ஒரு முறை இந்த காய்கறிகளில் கலந்து ரெண்டு நிமிடம் வேக விடுங்கள்.

- Advertisement -

இப்போது காய்கறிகளில் தேங்காய், தயிர் எல்லாம் கலந்து இருக்கும் கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை உருவி போட்டு கால் கப் நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றிய உடனே பாத்திரத்தை மூடி போட்டு வைத்து விடுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டு, விட்டு அடுப்பை அணைத்து விட்டு திறந்து பாருங்கள். நல்ல கம கம என்று கேரளவின் பாரம்பரிய உணவான அவியல் உங்கள் வீட்டு சமையல் அறையில் செமையாக ரெடியாகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 2 நிமிசத்துல தேங்காய் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா இந்த சட்னியை செஞ்சு பாருங்க. சட்னியே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட பத்து இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

அவியல் செய்யும் போது இரண்டு விஷயம் தான் கவனிக்க வேண்டும். காய்கறிகளை மிகவும் குழைவாக வேக வைக்க கூடாது. அதே நேரத்தில் தாளித்து ஊற்றக் கூடாது . தயிர் சேர்க்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் தயிறுக்கு பதிலாக மாங்காய் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -