படுக்கையறையில் எந்தெந்த பொருட்கள் இருந்தால் நிம்மதியே இருக்காது தெரியுமா? தூங்கும் போது இதையெல்லாம் தள்ளியே வையுங்க!

books-sleep
- Advertisement -

படுக்கை அறையில் அமைதியான ஒரு சூழ்நிலை இருந்தால் தான் நிம்மதியான தூக்கம் வரும். அமைதி என்பது நம் மனதால் மட்டுமல்ல நம்மை சுற்றி இருக்கும் பொருட்களினாலும் உண்டாகிறது. ஒரு சில பொருட்கள் வெளியிடும் எதிர்மறை அதிர்வலைகள் நிம்மதியை கெடுக்கும் வன்னம் அமையப் பெற்றிருக்கும். அந்த வகையில் படுக்கை அறையில் இருக்கும் இந்த பொருட்கள் நம் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறதா? அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பொதுவாக நாம் தூங்கும் படுக்கை அறையில் பெரிய அளவிலான கண்ணாடிகள் வைப்பது நிம்மதியை கெடுக்கும் என்று கூறுவார்கள். அப்படி கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருந்தாலும், அது இரவு நேரத்தில் திரை போட்டு மறைக்க பட்டிருக்க வேண்டும். கண்ணாடி மூன்றாம் நபர் இருப்பதாக நமக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொருள் ஆகும். குறிப்பாக கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து படுக்கும் இடத்திற்கு நேராக கண்ணாடிகள் அமைக்கப்பட்டு இருக்கக் கூடாது. இது அவர்களின் ஒற்றுமையை குறைக்க செய்யும்.

- Advertisement -

நீங்கள் படுக்கை அறையில் பயன்படுத்தும் பெட்ஷீட், தலையணை உறை, ஸ்கிரீன், மிதியடி போன்றவை சிகப்பு நிறத்தில் இருந்தால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரும். இதனால் நிம்மதி என்பதே இருக்காது. தூங்கும் அறையில் வெளிச்சம் குறைந்த மஞ்சள் நிற பல்புகள் தூக்கத்தை கெடுக்கும். அடர் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை கூட தவிர்ப்பது நல்லது. குறைந்த வெளிச்சம் உள்ள வெள்ளை நிற அல்லது ஊதா நிற பல்புகளை பயன்படுத்தினால் நன்றாக தூக்கம் வரும். அது போல் கொசுக்களும் அந்த இடத்தில் அதிகம் சுற்றாது.

படுக்கையறையில் கீழே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். இது நிச்சயம் நம்முடைய நிம்மதி குறைவிற்கு காரணமாக இருக்கும். இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொருளாகும். இந்த பொருள் படுக்கை அறையில் இருந்தால் தூக்கமின்மை பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இரும்புக் கட்டிலில் தூங்குபவர்களை விட, மரக்கட்டில், கயிற்று கட்டிலில் தூங்குபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை பெருமளவு குறைந்திருக்கும்.

- Advertisement -

படுக்கையறையில் வாஸ்து பொருட்களை வைப்பது, நல்ல புத்தகங்களை அடுக்கி வைப்பது, தலையணைக்கு கீழே மருதாணி இலைகளை வைப்பது, கட்டிலுக்கு கீழே வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பது போன்றவை நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும் சில முக்கிய பொருட்கள் ஆகும். கதிர்வீச்சு மற்றும் மின் ஆற்றலை அளிக்கக்கூடிய பொருட்கள் படுக்கை அறையில் இருந்தால் நிம்மதி குறைவு ஏற்படும். நீங்கள் தூங்கும் அறையில் இருந்து உங்கள் மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றை தள்ளியே வைத்திருங்கள். அதே போல சப்தம் எழுப்பும் பொருட்கள், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றையும் தூங்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது.

கட்டிலுக்குக் கீழே படுக்கை அறையில் தேவையற்ற பொருட்களை குப்பை போல குவித்து வைப்பதும் நிம்மதி குறைவை ஏற்படுத்தும். அங்கு எந்த விதமான பொருட்களும் மூட்டை கட்டி வைக்க கூடாது. திறந்த நிலையில் இருக்க வேண்டும். திறந்த நிலையில் இல்லாமல் மூடிய நிலையில் இருக்கும் பொருட்கள் மூலம் எதிர்மறை அதிர்வுகள் வெளியாகும். இதனால் நிம்மதியான உறக்கம் வருவதில் தடை ஏற்படும். சிலர் படுக்கை அறையை மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி போன்றவற்றுக்கு வாடகை விட்டிருப்பார்கள். இது போல் இருக்கும் படுக்கை அறையிலும் நிம்மதி குறைவு ஏற்படும் எனவே சரியான வகையில் படுக்கை அறையை அமைத்து, நிம்மதியான உறக்கத்தைப் பெறலாமே!

- Advertisement -