கட்டுக்கட்டாக பணம் சேர பீரோவில் இருக்க வேண்டிய படம் என்ன? பேப்பரில் இதை எழுதி பீரோவில் வைத்தால் நினைத்தது உடனே நடக்குமா?

gajalakshmi-cash

எல்லோருடைய வாழ்க்கையிலும் பணத் தேவை என்பது இருக்க தான் செய்யும். பணம் தான் வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் பணம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை என்றாகி விட்டது. கூடப் பிறந்த ரத்த பந்தங்கள் முதல் ஈன்றெடுத்த பிள்ளைகள் வரை பணம் இருந்தால் தான் மதிக்க கூட செய்கிறார்கள். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சில விஷயங்களைக் கூட பணம் கொடுத்து வாங்கி விடும் நிலைமை என்றாகி விட்டது.

money-1

ஒருவருடைய வீட்டில் பணம் எப்பொழுதும் கட்டு கட்டாக நிரம்பியிருக்க வேண்டும் என்றால் அவருக்கு குபேர கடாட்சம் இருக்க வேண்டும். வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்யா விட்டால் பணம் மட்டும் எப்படி தங்கும்? வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற, வீட்டில் பணம் சேர பீரோவில் என்ன படம் இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவருடைய வேண்டுதல்கள் எழுத்து வடிவமாக மாற்றி எழுதி, சீட்டு போட்டு பார்க்கும் பொழுது நமக்கு தேவையான விடைகளும் எளிதில் கிடைத்து விடுகின்றன. இது ஆன்மீக சாஸ்திரத்தில் நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான். ஆன்மீகத்தில் சீட்டு எழுதிப் பார்ப்பது, பூ போட்டு பார்ப்பது, விபூதி மற்றும் குங்குமம் வைத்து பார்ப்பது போன்ற செயல்களை செய்வது உண்டு.

rolled paper

அந்த வரிசையில் நாம் செய்யப் போகும் இந்த ஒரு விஷயமும் நம் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற கூடிய வகையில் இந்த பரிகாரம் அமைய இருக்கிறது. ஒருவருடைய பீரோ சரியான திசையில் முதலில் வைத்திருக்க வேண்டும். பீரோவின் கதவை நீங்கள் திறந்து பார்க்கும் பொழுது உள்ளே மகாலட்சுமியின் படம் அல்லது கஜலட்சுமியின் படம் இருக்க வேண்டும். பச்சை நிற புடவை கட்டி கொண்டிருக்கும் கஜலட்சுமி தேவி அள்ள அள்ள குறையாத பணத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

பீரோவில் கட்டு கட்டாக பணம் சேர பச்சை நிற புடவை அணிந்திருக்கும் கஜலட்சுமி, யானைகளின் அபிஷேகத்துடன் இருப்பாள். அந்த படத்தை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, வெள்ளிக்கிழமை தோறும் தூபத்தை காண்பியுங்கள். மகாலட்சுமிக்கு மல்லிகைப்பூ என்றால் மிகவும் விருப்பமானதாகும். ஆகவே பூஜையின் போது கஜலட்சுமி தேவிக்கு மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சிக்கும் பொழுது ‘கஜலட்சுமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள்.

gajalakshmi

ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்களுடைய வேண்டுதல்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருக்கும். உங்கள் பிரச்சனை பணமாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி அவற்றை எழுதி நான்காக மடித்து கஜலட்சுமி தாயார் முன்பு வைத்து, சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகத்தை தேவி அமைத்து தருவார்கள்.

lakshmi-devi

கஜலக்ஷ்மியை வணங்குபவர்களுக்கு சகல, சௌபாக்கியங்களும் கிடைக்கும். பதினாறு செல்வங்களும், பரிவாரங்களும் அமையும் என்பது ஐதீகம். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் உண்டாகக்கூடிய பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றார். பௌர்ணமி நாளில் கஜலட்சுமி தாயாருக்கு குத்து விளக்கு ஏற்றி, கல்கண்டு தீபம் ஏற்றி வர, கட்டு கட்டாக பீரோ முழுவதும் பணமாக சேரும். இவை பொதுநல எண்ணத்தோடு செய்யும் பொழுது நிச்சயமாக நிறைவேறும். சுயநலத்தோடு செய்யும் பொழுது எண்ணங்கள் தடைபடும்.