இல்லத்தரசிகளுக்கு தேவையான இனிய 10 குறிப்புகள்! இது தெரிஞ்சா ஆரோக்கியமாகவும் இருக்கலாமா?

- Advertisement -

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படக்கூடிய சமையல் குறிப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமாக இருக்கும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தால் வேலையும் சுலபமாகும், ஆரோக்கியமும் வலுப்பெறும். அப்படியான அசத்தலான 10 குறிப்புகளைத் தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

குறிப்பு 1:
பொதுவாக ரசாயன உரம் போட்டு காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் ஒருமுறை அதை சுடு தண்ணீரில் போட்டு பிறகு பயன்படுத்துங்கள். ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்’ என்று நம் முன்னோர்கள் கூறுவர். எனவே மிளகை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இதுபோன்ற ரசாயன உரங்களை கொண்ட காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் கூடிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
பூண்டு அதிக அளவில் உணவில் சேர்ப்பதால் ஏராளமான நன்மைகள் நடக்கும். ஆனால் உரிப்பதற்கு என்னவோ நிறைய பேர் சோம்பல்தனம் படுவர். பூண்டை மொத்தமாக வாங்கி உதிர்த்து வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு சூடு ஆறியதும் கைகளால் கசக்கினாலே பூண்டு தோல் எளிதாக உறிந்து வந்து விடும். இதற்காக இனியும் சிரமப்படாதீர்கள்.

குறிப்பு 3:
அப்பளம் வாங்கி வைப்பவர்கள் அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டும். டப்பாவின் அடியில் செல்வது கல் உப்பை போட்டு மேலே டிஷ்யூ பேப்பர் வையுங்கள். அதன் மீது அப்பளங்களை அடுக்கி வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமக்கு போகவே செய்யாது.

- Advertisement -

குறிப்பு 4:
கோதுமை மாவு அரைப்பவர்கள் மொத்தமாக அரைப்பது உண்டு. இப்படி நிறைய அரைத்து வைத்தால் நீண்ட காலம் அதை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியாது. வண்டுகளும், பூச்சிகளும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு அல்லது மாவு கட்டி தட்டி விடும். இப்படி ஆகாமல் இருக்க, நீண்ட காலம் கோதுமை மாவு பிரஷ்ஷாக இருக்க நான்கைந்து பிரியாணி இலைகளை போட்டு வையுங்கள்.

குறிப்பு 5:
கோடை காலத்தில் அம்மை நோய் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அதிக அளவு இளநீர், கஞ்சி, மோர், கேழ்வரகு கூழ் பழச்சாறுகள், பால், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 6:
ரத்த சோகை என்னும் நோயிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அடிக்கடி கருப்பு உளுந்து கொண்டு உணவுகளை சமைத்துக் கொடுங்கள். கருப்பு உளுந்து மலம் கட்டாமல், செரிமான திறனை மேம்படுத்த செய்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

குறிப்பு 7:
யானை சாணம் கிடைத்தால் அவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு இயற்கையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. நம் நாசிக்கு எந்தவிதமான தீங்கும் இவை விளைவிப்பது கிடையாது. ஒரு சிறு துண்டு யானை சாணத்தை பற்ற வைத்து புகைப் போட்டால் வீட்டில் ஒரு கொசு கூட தங்குவதில்லை.

குறிப்பு 8:
காலில் சேற்றுப்புண் வந்தால் கொஞ்சம் வேப்ப எண்ணெயை சூடு படுத்தி விரல்களுக்கு இடுக்குகளில் தடவி கொடுத்தால் வந்த தடம் தெரியாமல் மாயமாய் மறையும்.

குறிப்பு 9:
மாம்பழ சீசன் துவங்குகிறது. இந்த சமயத்தில் மாம்பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
வெள்ளை சட்னியை தேங்காய் பொட்டுக்கடலை எதையும் சேர்க்காமல் இப்படி வித்தியாசமா அரைச்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுடச்சுட இட்லியோடு இந்த சட்னி வைத்து சாப்பிட்டா சான்சே இல்ல.

குறிப்பு 10:
வயிற்று தொந்தரவுகள் இருப்பவர்கள் ஒரு டம்ளர் நீர் மோருடன், ஒரு ஸ்பூன் அளவிற்கு வறுத்து பொடித்த சீரகத்தை கலந்து அப்படியே குடித்தால் போதும். வயிறு தொடர்பான எல்லா பிரச்சனையும் போயே போச்சு.

- Advertisement -