பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் முழு பலனையும் நம்மால் பெற முடியுமா?

brammamuhoortham
- Advertisement -

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத் தரும். சூரிய உதயத்திற்கு முன்பு தீப வழிபாடு செய்வது நம் வீட்டில் இருக்கும் இருளை முழுமையாக நீக்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் தீபம் ஏற்றலாமா, வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது பூஜை செய்யும் இடத்தில் தீபம் ஏற்றலாமா, அசைவம் சாப்பிட்டுவிட்டு தலைக்கு குளிக்காமல் தீபம் ஏற்றலாமா இப்படிப்பட்ட குழப்பங்களுக்கான தீர்வைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Amman-deepam-1

பொதுவாகவே மனத் திருப்தியோடு நாம் செய்யக் கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அது தோல்வியை காணாது. மனக் குழப்பத்தோடு, மன சஞ்சலத்தோடு நாம் செய்யும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதில் பின்னடைவு ஏற்படும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் இல்லை. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கலாம்.

- Advertisement -

குளிக்காமல், பூஜை அறைக்கோ, பூஜை செய்யும் இடத்திற்கோ, நாம் செல்லும் போது நம்முடைய மன நிலைமை எப்படி இருக்கும். நாம் குளிக்கவில்லை! இப்போது விளக்கு ஏற்றினால் அது நல்லதா? கெட்டதா? என்ற உறுத்தல் நம்மிடம் இருந்து கொண்டே இருக்கும். மன ஒருமைப்பாட்டுடன் முழு ஈடுபாட்டோடு உங்களால் பூஜை செய்ய முடியாது.

முந்தையநாள் அசைவம் சாப்பிட்டிருப்பீர்கள். அடுத்த நாள் காலை தலை ஸ்நானம் செய்து இருக்க மாட்டீர்கள். மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். நேற்று அசைவம் சாப்பிட்டு விட்டோம். இன்று தலைக்கு குளிக்க வில்லை இறை வழிபாடு செய்யலாமா வேண்டாமா, என்ற சஞ்சலம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

- Advertisement -

இப்படியாக மனத்திருப்தி இல்லாமல் நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றினால் அது உங்களுக்கு பலன் அளிக்காது. வீட்டில் இருக்கும் பெண்கள், முந்தைய நாள், சுத்தமாக இருக்கும் சமயத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சமயத்தில், மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முகம் கை கால்களை அலம்பி விட்டு தீபம் ஏற்றலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும், காலை எழுந்தவுடன் நீங்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் தலைக்கு குளிக்க முடியவில்லை என்றாலும், வெறும் மேலுக்கு மட்டும், அதாவது உடலுக்கு மட்டும் குளித்து விட்டு தீபம் ஏற்றுவது மனதிற்கு நிம்மதியை தரும். குளித்துவிட்டு தீபம் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.

praying-god

பெண்கள் சுத்தபத்தமாக இல்லாத சமயத்தில், அசைவம் சாப்பிட்ட சூழ்நிலையில் கட்டாயம் தலைக்கு குளிக்காமல், வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது. இது கண்ணுக்கு தெரியாத தோஷத்தை கட்டாயம் உங்களுக்கு ஏற்படுத்திவிடும். முட்டை மட்டுமே சமைத்தாலும் அது அசைவமே, தலைக்கு குளித்து விட்டு தீபம் ஏற்றும் பழக்கத்தை கொண்டு வருவது மனநிம்மதியைக் கொடுக்கும். மன சஞ்சலம் இல்லாத வழிபாடு நன்மையை கொடுக்கும் என்பது தான் சரி.

- Advertisement -

pray

இதேபோல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள் வேறு இடத்தில் உறங்கும் பட்சத்தில், நீங்கள் பூஜை செய்யும் இடத்தில் தீபம் ஏற்றலாம். உங்களுக்கு பூஜை செய்யும் இடமும், படுத்து உறங்கும் இடமும் ஒன்று எனும் பட்சத்தில், ஒன்றுமே செய்யமுடியாது. உறங்குபவர்களை கொஞ்சம் ஓரமாக தள்ளி படுக்க சொல்லி விட்டு, அந்த இடத்தில் நீங்கள் பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.

poojai

படுத்து உறங்குபவர்கள் தலை மாட்டில், அதாவது தலைப் பக்கத்தில் தீபம் ஏற்றி வழிபடக் கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதையும் நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். அடுத்தபடியாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, குளித்து முடித்துவிட்டு தலையில் ஈரத்தைத் துவட்டி விட்டு, அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும். முடிந்தவரை குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் இருபாலரும் தவிர்ப்பதே நல்லது. எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும், அதை மன நிறைவோடு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள், காலையில் சமையலறைக்குள் சென்ற உடன், இந்த 1 வார்த்தையை சொல்லி விட்டு, அடுப்பை பற்ற வைத்தால், வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -