கடவுளுக்கு இணையாக வழிபடப்படும் மனிதர் – பார்த்தாலே வினை தீரும் அதிசயம் – வீடியோ

Bu stand baba

குழந்தைகளைப்போல கள்ளங்கபடம் ஏதுமற்று இருப்பவர்கள் மகான்களும் சித்த புருஷர்களும். இதன் காரணமாகவே நம்மில் பலர் காரணம் புரியாமலே அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். பொதுவாக சராசரி மனிதர்களின் தொடர்பில்லாத இடங்களில் தனிமையை விரும்பி தங்கியிருப்பார்கள் சித்தர்கள். ஆனால் இங்கு ஒரு சித்தர் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமான பேருந்து நிலையத்தில் இருந்து தன்னிடம் வருபவர்களின் குறைகளைப் போக்குகிறார். அவரை பற்றி இக்காணொளியைக் காணலாம்.

“பஸ் ஸ்டாண்ட் பாபா’ என்றழைக்கப்படும் இவர் பெரும்பாலான நேரம் வேலூர் நகரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறார். பிறருடன் அதிகம் பேசாத இந்த பாபாவின் பூர்விகம் அஸ்ஸாம் மாநிலம் என்கின்றனர் இவரை நன்கு அறிந்தவர்கள். இவரின் ஆன்மிக சக்தியை உணர்ந்த சிலர் இவர்டம் தங்களின் பணம், பொருட்களை கொடுத்து ஆசிபெற்று சென்ற பிறகு அவற்றால் அதிக நன்மைகள் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் இவர் வசிப்பதற்கு சிறிய வீடொன்றும், இவர் பயணம் செய்ய ஆட்டோ ஒன்றையும் இவருக்காக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர் இவரது பக்தர்கள். இந்த பாபா ஒரே நேரத்தில் பல சட்டைகளை அணிவது, பக்தர்கள் வாங்கித்தரும் செருப்புகளில் ஒன்றை மட்டுமே அணிவது போன்ற யாரும் காரணம் புரிந்து கொள்ள முடியாத சில செயல்களைச் செய்கிறார்.மேலும் பாபா உணவருந்தி தன் தட்டில் கைகழுவியபின் அந்நீரை தங்களின் பாபம் போக்கும் தீர்த்தமாக அருந்துகின்றனர் இவரின் சில பக்தர்கள்.

சில நேரங்களில் இவரது பக்தர்கள் இந்த “பஸ் ஸ்டாண்ட்” பாபாவிற்கு கோவிலிலிருக்கும் விக்ரகத்தைப் போல பூமாலை, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து இவரது கால்களுக்கு சந்தனம்,குங்குமம் சாற்றிப் பாத பூஜை செய்கின்றனர். இப்படி பாபாவிற்கு செய்த பூஜைகளால் தங்கள் பல பிரச்சனைகள் பாபாவின் அருளால் தீர்ந்ததாக கூறுகிறார்கள் இவரது பக்தர்கள்.இந்த பாபா நிச்சயம் ஒரு அதிசய மனிதர் தான்.