எண்ணெய் வடிந்து முகம் எப்போதுமே ரொம்ப ரொம்ப டல்லா இருக்குதா. முகத்தை பொலிவாக மாற்ற நிறைய காசு செலவு செய்யாமல், வீட்டில் இருக்கும் முந்திரி பருப்பை வைத்து தான் ஒரு ஃபேஸ் பேக்கை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். முந்திரிப் பருப்பை வைத்து பேஸ் பேக்கா. ஆமாங்க யோசிக்காதீங்க. வீட்டில் முந்திரி பருப்பு இருந்தா உடனடியாக இதை ட்ரை பண்ணி பாருங்க. டல்லா இருக்க உங்க முகம் உடனடியா டாலடிக்க ஆரம்பிச்சுரும். தினம் தினம் மேக்கப் போடாமலேயே அழகான சருமத்தை தரும் அழகான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.
முகப்பொலிவுக்கு முந்திரி பருப்பு ஃபேஸ் பேக்:
முந்திரிப் பருப்பில் கால்சியம், சிங்க், வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்குது. இது சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளும். ஒரு சின்ன கிண்ணத்தில் 5 லிருந்து 6 முந்திரி பருப்பு போட்டு பச்சை பால் ஊற்றி நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் ஆக இருந்தால் பச்சை பாலை தவிர்த்து விட்டு, ரோஸ் வாட்டர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஊறிய பின்பு முந்திரி பருப்பையும், ஊறவைத்த பாலையும் அப்படியே மிக்ஸி ஜாரில் ஊற்றி 3 ஸ்பூன் கடலை மாவு போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ரோஸ் வாட்டர் ஊற்றி கூட இதை முகத்தில் அப்ளை செய்யும் பக்குவத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து அப்படியே நன்றாக காய வைத்து விடுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை ஈரம் செய்து கொண்டு நன்றாக மசாஜ் செய்து கழுவி விட்டால் முகம் உடனடியாக பொலிவு பெறும். இது ஒரு மெத்தட்.
உங்கள் வீட்டில் கடலை மாவு இல்லை என்றாலும் பரவாயில்லை. முந்திரிப் பருப்பை ஊற வைக்க நேரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. மிக்ஸி ஜாரில் 4 அல்லது 5 முந்திரி பருப்பை போட்டு ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக அரைத்து அந்த விழுதில் தேவைப்பட்டால் 2 சொட்டு பாதாம் ஆயில் ஊற்றி, கலந்து அப்படியே முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட்டால் உடனடியாக பேசியல் செய்த லுக் உங்களுக்கு கிடைக்கும்.
வாரத்தில் இரண்டு நாள் முந்திரி பருப்பை வைத்து இதே போல தொடர்ந்து பேக் போட்டு வந்தால் உங்களுடைய முகச் சுரக்கும் நீங்கி, வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம். முகத்தில் இருக்கக்கூடிய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை பார்க்கலாம். முந்திரிப் பருப்புக்குள் இவ்வளவு அழகு சம்பந்தப்பட்ட ரகசியம் அடங்கியிருக்குதா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இதில் சத்துக்கள் அடங்கி இருக்குது.
இதையும் படிக்கலாமே: காசே இல்லாமல், காஸ்ட்லியா ஃபேசியல் செய்த லுக்கை முகத்தில் கொண்டு வர, பட்ஜெட் ஃபேஸ் பேக் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
இதே போல நட்ஸ் வகைகளை சாப்பிடுவதிலும் நீங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பாதம், பிஸ்தா, வால்நட், வேர்கடலை, முந்திரி பருப்பு, இந்த பொருட்களை எல்லாம் அளவோடு தினமும் சராசரியாக சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவு பெறும். மிஸ் பண்ணாம அழகு குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.