நீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். அந்த வகையில் உங்களுடைய நட்சத்திரத்தின்படி உங்களது குணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அஸ்வினி

- Advertisement -

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக எதிலும் புதுமையை விருப்புபவர்களாக இருப்பார்கள். மேலும் ஆடம்பர வாழ்வில் கொஞ்சம் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆடம்பரத்திற்கு ஏற்றவாறு செல்வந்தர்களாகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். விவாதம் செய்வதில் சிறந்து விளங்குவார்கள். அதோடு கல்விமானாகவும் பக்திமானாகவும் இருப்பார்கள்.

பரணி

- Advertisement -

எதிரிகளை எளிதில் வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். அதோடு திறமைசாலியாகவும் தர்மவானாகவும் திகள்பவர்கள். எதையும் சாதிப்பதில் இவர்கள் வல்லவர்கள். அதோடு அதிஷ்ட தேவதையும் இவர்களுக்கு துணை நிற்கும்.

கார்த்திகை

- Advertisement -

பக்தியில் சிறந்து விளங்குபவர்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். பழகுவதில் பண்பாளராகவும் மென்மையானவர்கர்களாகவும் திகழ்பவர்கள். கல்வியில் சுமாராக இருந்தாலும் செல்வந்தர்களாகவே வாழ்வர்.

ரோகினி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலாரசிகராகவும், செல்வாக்கு மிக்கவராகவும், கம்பீரவானாகவும், உல்லாசப்பிரியராகவும், ஊர் சுற்றுபவராகவும், வசீகரமானவராகவும் இருப்பார்கள்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மவானாகவும், செல்வம் சேர்ப்பதில் ஆர்வமுடையவராகவும், தைரியசாலியாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திட்டமிட்டு பணிசெய்பவர்களாகவும், சாமர்த்தியசாலியாகவும், எளிமையாகவும், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவராகவும் இருப்பார்கள்.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றிமிக்கவராகவும், சாதுர்யப் பேச்சு திறன் கொண்டவராகவும், கல்விமானாகவும், ஊர்சுற்றுவதில் ஆர்வமிக்கவராகவும் இருப்பார்கள்.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தியில் நாட்டம் உடையவராகவும், வைராக்கியம் மிக்கவராகவும், பிறரை மதிப்பவராகவும், நண்பர்களை நேசிப்பவராகவும், மென்மையானவராகவும், புகழ்மிக்கவராகவும் இருப்பார்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சத்தியவானாகவும், தர்மவானாகவும், செலவாளியாகவும், நேர்மை மிக்கவராகவும், ஆடம்பரப்பிரியராகவும் இருப்பார்கள்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையாக நடக்க விரும்புபவராகவும், தர்மவானாகவும், கல்வியில் ஆர்வம் உடையவராகவும், நேர்மை மிக்கவராகவும், ஆராய்ச்சி மனப்பான்மை உடையவராகவும், பழக இனிமையானவராகவும் இருப்பார்கள்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விவசாயம், வியாபாரத்தில் ஆர்வமுடையவராகவும், புத்திசாலியாகவும், ஒழுக்கமானவராகவும், உண்மையானவராகவும், செல்வாக்கு மற்றும் பேச்சுத்திறன் மிக்கவராகவும் இருப்பார்கள்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்திமானாகவும், நன்றி மறவாதவராகவும், நட்புடன் பழகுபவராகவும், நாணயமானவராகவும், சுகபோகியாகவும், உறவினர்களை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலாரசிகராகவும், ஆடை ஆபரணப்பிரியராகவும், கல்வியில் ஆர்வமுடையவராகவும், பழக இனியவராகவும், நகைச்சுவையாகப் பேசுபவராகவும், தாய் மீது பாசம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலியாகவும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடையவராகவும், கல்விமானாகவும், பரந்த உள்ளம் கொண்டவராகவும், எதிரிமீது இரக்கம் கொண்டவராகவும், சாதிப்பதில் வல்லவராகவும் இருப்பார்கள்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழக இனியவராகவும், புத்தி கூர்மையானவராகவும், யோசித்து செயல்படுவராகவும், சுகபோகியாகவும், யோகம் மிக்கவராகவும், நம்பகமானவராகவும் இருப்பார்கள்.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மவானாகவும், வியாபார ஆர்வமுடையவராகவும், கலாரசிகராகவும், சாமர்த்தியசாலியாகவும், சுறுசுறுப்பானவராகவும் ,தற்பெருமை கொண்டவராகவும் இருப்பார்கள்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தஸ்த்து மிக்கவராகவும், நேர்மையானவராகவும், அமைதியானவானராகவும், ஊர்சுற்றுதில் ஆர்வமுடையவராகவும், அரசால் பாராட்டு பெறுபவராகவும் இருப்பார்கள்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறும்பு செய்வதில் வல்லவராகவும், துணிச்சலானவராகவும், முன்கோபியாகவும், நட்ப்பால் சாபம் பெற்றவராகவும், சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்கள்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடக்கமிக்கவராகவும், சுறுசுறுப்பானவராகவும், நீதிமானாகவும், கல்விமானாகவும், உடல்பலம்மிக்கவராகவும், புகழ்விரும்பியாகவும் இருப்பார்கள்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடமையில் ஆர்வம் கொண்டவராகவும், பிடிவாதக்காரராகவும், சுகபோகியாகவும், செல்வாக்குமிக்கவராகவும், வாக்குவாதத்தில்வல்லவராகவும் இருப்பார்கள்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை சாதிப்பவராகவும், தைரியசாலியாகவும், பொறுமைசாலி யாகவும், சாதுர்யமாகப் பேசுபவராகவும், கலையில் ஆர்வமுடையவராகவும் இருப்பார்கள்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உதவுவதில் வல்லவராகவும், பக்திமானாகவும், சமூகசேவகராகவும், சொத்துசுகம் கொண்டவராகவும், பிறரை மதிப்பவராகவும் இருப்பார்கள்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடமையில் ஆர்வம் கொண்டவராகவும், கம்பீரமானவராகவும், தைரியசாலியாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், முன்கோபியாகவும், மனைவியை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலி யாகவும், வசீகரனமானவராகவும், நட்புக்காக செயல்படுவராகவும், முன்யோசனை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும், திறமையாக செயல்படுபவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்கள்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில் ஆர்வம் மிக்கவராகவும், மன திடமானவராகவும், பலசாலியாகவும், சுகபோகியாகவும், பழக இனியவராகவும், குடும்பத்தை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்திமானாகவும், கல்வியாளராகவும், கடமையில் ஆர்வமிக்கவராகவும், சாதுர்யமாகப் பேசுபவராகவும், ஆபரணப்பிரியராகவும் இருப்பார்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெல்பவராகவும், தைரியசாலியாகவும், நேர்மையானவராகவும், சுகபோகத்தில் நாட்டமுடையவராகவும், பழக இனியவராகவும், தற்புகழ்ச்சி விரும்புபவராகவும் இருப்பார்கள்.

- Advertisement -