சமையலறையில் இந்த குறிப்புகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு பயன்படும் பயனுள்ள 10 குறிப்புகள்.

kitchen
- Advertisement -

சமையலைப் பொருத்தவரை நாம் எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொண்டாலும் அதற்கு அளவு என்பதே கிடையாது. கடல்போல மேலும் மேலும் நிறைய குறிப்புகளும் ரெசிபிகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்மால் முடிந்தவரை நாம் சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டால், நம் வீட்டில் சமையலறை வேலைகளை சுலபமாக முடிக்க முடியும். அப்படி உங்களுக்கு பயன்படும்படியான 10 சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் இந்த பதிவில்.

Tip 1:
காலியான பாட்டில்களை கழுவி காயவைத்து மூடிபோட்டு ஸ்டோர் செய்து வைத்திருப்போம். இந்த பாட்டில்களை எடுத்து மூடியை திறந்து ஏதாவது ஒரு பொருளை கொட்ட பயன்படுத்த எடுப்போம். நன்றாக கழுவி வெயிலில் காய வைத்த பாட்டிலை திறந்த உடனேயே ஒரு கெட்ட வாடை வீசும். அப்படியே உணவுப் பொருட்களை கொட்டி ஸ்டோர் செய்யமுடியாது. இந்த கெட்டவாடை வீசாமல் தடுக்க என்ன செய்வது. பாட்டில்களை கழுவி காயவைத்து பின்பு அந்த பாட்டிலுக்குள் ஒரு பேப்பரை கசக்கி போட்டு அதன் பின்பு மூடி ஸ்டோர் செய்து வைத்து பாருங்கள். அந்த பாட்டிலுக்கு உள்ளே எந்த கெட்ட வாடையும் வீசாது. கெட்ட வாடையை எல்லாம் அந்த பேப்பர் உறிஞ்சி வைத்திருக்கும். பேப்பரை தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

Tip 2:
சிக்கன் மட்டன் வாங்கி கழுவிய பிறகு அதில் நீச்ச வாடை அடிக்காமல் இருக்க என்ன செய்வது. நன்றாக கழுவி சுத்தம் செய்த இறைச்சியில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் 2 ஸ்பூன் கல்லுப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து அந்த தண்ணீரில் நன்றாக ஊற வைத்துவிட வேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரில் அலசி கழுவி சமைத்தால் இறைச்சி ருசியாக இருக்கும். அசைவ சமையலில் நீச்ச வாடை வீசாமல் இருக்கும்.

Tip 3:
இட்லி மாவு பிரிட்ஜில் வைத்தால் கூட பொங்கி வழியுதா? மாவின் மேல் வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கவிழ்த்து போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

Tip 4:
தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கிய உடன் அதில் 10 மிளகை போட்டு வைத்துவிடவேண்டும். 6 மாதம் ஆனாலும் தேங்காய் எண்ணெய் சிக்கு வாடை அடிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். இந்த மிளகு போட்டு ஊறவைத்த எண்ணெயை தாராளமாக தலையில் தேய்க்கலாம்.

Tip 5:
சர்க்கரை ஸ்டோர் செய்து வைத்திருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை போட்டு வைத்தால் அந்த சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்கும்.

- Advertisement -

Tip 6:
மாதத்தில் ஒருமுறை வெஜிடபிள் கட்டரை இப்படி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெஜிடபிள் கட்டருக்கு மேலே கொஞ்சமாக சோடா உப்பு தூவி, எலுமிச்சை பழ சாறு பிழிந்து அந்த எலுமிச்சம் பழத்தோலில் எல்லா இடங்களிலும் தேய்த்துக் கொடுத்து, ஐந்து நிமிடம் ஊற வைத்து விட்டு, மீண்டும் நாரைக் கொண்டு தேய்த்து கழுவி பாருங்கள். உங்கள் வெஜிடபிள் கட்டரில் எவ்வளவு அழுக்கு ஒட்டியிருக்குனு உங்களுக்கே தெரியும்.

Tip 7:
பாட்டிலில் பிஸ்கட் போட்டு என்னதான் டைட்டாக மூடி வைத்தாலும் சில நாட்களில் பிஸ்கட் நமத்து போயிடும். பிஸ்கட்டுகள் நமத்துப் போகாமல் இருக்க அந்த பாட்டில் ஒரு ஸ்பூன் அரிசியை போட்டு வைக்கவேண்டும்.

Tip 8:
கருணைக் கிழங்கை தண்ணீரில் போட்டு வேக வைக்கும் போது கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளியை உருட்டி போட்டு, அந்த கருணைக்கிழங்கை வேக வைத்தால் கிழங்கில் இருக்கும் அரிப்பு இருக்காது. கிழங்கு வறுவல் சுவையாகவும் இருக்கும்.

Tip 9:
விம் லிக்விட் ஜெல், ஜூஸ் எல்லாம் சில சமயம் கவரில் நமக்கு பேக் பண்ணி கிடைக்கும். கவருக்குள் இருக்கும் பொருள் தீர்ந்து போனதும், அந்த கவரை தூக்கிப் போடாதீங்க. காலியான பேக்கை முதலில் சுத்தமாக கழுவி விட்டு அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பி மூடி போட்டு ப்ரீசரில் வைத்துக்கொள்ளுங்கள். ஐஸ் பேக் ரெடியாக இருக்கும்.

குழந்தைகள் எங்காவது விழுந்து விட்டாலோ அல்லது நம்முடைய உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்றாலும், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இறைச்சியை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த ஐஸ் பேக் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tip 10:
எலுமிச்சம் பழத்தை வெட்டி சாறு எடுப்பதற்கு முன்பு அந்தப் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு எடுத்து சாரு பிழியுங்கள். வழக்கத்தைவிட நிறையச் சாறு கிடைக்கும்.

- Advertisement -