- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இந்த ஐடியா தெரியாம இத்தனை நாளா காசை கரியாக்கிடோமே! பாத்ரூம், கேஸ் ஸ்டவ், சிங்க், டைல்ஸ்,...

இந்த ஐடியா தெரியாம இத்தனை நாளா காசை கரியாக்கிடோமே! பாத்ரூம், கேஸ் ஸ்டவ், சிங்க், டைல்ஸ், இப்படி எல்லா கிளீனிங்க்கும் சேர்த்து இந்த ஒரு லிக்விட் போதும்.

- Advertisement -

பொதுவாகவே நம்முடைய வீட்டில் சுத்தம் செய்வதற்காக நாம் வாங்கக்கூடிய பொருட்களுக்கு ஆகும் செலவு ரொம்ப ரொம்ப அதிகம். உதாரணத்திற்கு சின்ன கால்குலேஷன் போடுவோமா. வீடு துடைக்க லைசால், பாத்ரூம் கழுவ ரெட் ஹேப்பிக், டாய்லெட் கழுவ ப்ளூ ஹேர் பிக், சிங்க் கழுவ ஒரு லிக்விட், ஸ்டவ் துடைக்க ஒரு லிக்விட், டயல்சை துடைத்து எடுக்க ஒரு லிக்விட், என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளையாவது சுத்தம் செய்வதற்காக வேண்டி ஒரு மாதத்திற்கு நாம் வாங்க வேண்டி இருக்கும். இந்த காசை மிச்சம் பிடிக்க எளிமையான ஒரு ஐடியா இருக்கு. இந்த லிக்விடை உங்களுடைய வீட்டில் மிக மலிவான செலவில் தயார் செய்து வைத்துவிட்டால், மூன்று மாதங்கள் வரை கூட இதே லிக்விடை எல்லா வேலைகளுக்கும் நாம் பயன்படுத்தலாம். அந்த லிக்விடை எப்படி தயார் செய்வது. அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்ற பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

வீட்டை சுத்தம் செய்ய வீட்டிலேயே லிக்விட் தயாரிக்கும் முறை:
இதற்கு உங்கள் சௌகரியம் போல மூன்றிலிருந்து நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் 1/2 லிட்டர் அளவு குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். நிறைய எலுமிச்சம் பழம் என்றால் கூடுதலாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். அந்த எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி வர வேண்டும்.

- Advertisement -

இந்த தண்ணீரில் 2 ஸ்பூன் கல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரிலேயே கரைந்து விடும். அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து நன்றாக பிழிந்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் லெமன் வாட்டர் நமக்கு கிடைத்திருக்கும்.

இந்த தண்ணீரோடு நீங்கள் தலைக்கு போட பயன்படுத்தும் ஷாம்பூ 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, சோடா உப்பு 2 ஸ்பூன் போட்டு, நன்றாக கலந்தால் நமக்குத் தேவையான லிக்விட் தயார். (எலுமிச்சம்பழம், கல் உப்பு, ஷாம்பு, சோடா உப்பு, 4 பொருட்கள் தான் தேவை.) இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாது. உங்களுக்கு டவுட்டா இருந்தா இதை எடுத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். அது பாட்டுக்கு இருக்கும். தேவைப்படும் போது வெளியில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த லிக்விடை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சமையலறையில் கேஸ் ஸ்டவ், கேஸ் ஸ்டவ்வுக்கு மேலே இருக்கும் டயல்ஸ், சமையல் அறையில் ஒட்டி இருக்கும் டைல்ஸ், எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்துவிட்டு ஒரு துணியை வைத்து துடைத்து எடுத்தாலே போதும். எண்ணெய் பிசுக்கு எல்லாம் நீங்கி உங்களுடைய சமையலறை வாசமாக மாறிவிடும். குறிப்பாக அசைவம் செய்த அன்று இந்த லிக்விடை வைத்து சமையல் மேடையையும் சமையல் அடுப்பையும் சுத்தம் செய்தால் அசைவ வடை சுத்தமாக வீசாது. இதே லிக்விடை பிரிட்ஜ் துடைக்கவும் பயன்படுத்தலாம்.

இதே லிக்விடை பாத்ரூமுக்கு தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேவை என்றால் இதில் ஒரு மூடி டெட்டாயிலை ஊற்றி பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இந்த லிக்விடை பாத்ரூம் முழுவதும் ஊற்றிவிட்டு நன்றாக பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன் பின்பு ஒரு துடைப்பம் போட்டு தேய்த்து கழுவினால் உங்களுடைய பாத்ரூம் பளிச் பளிச்சு என சுத்தமாக வாசமாக மாறிவிடும். இதே போல வாஷ்பேஷனையும் கழுவலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக தரை துடைக்க ஒரு பக்கட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு மூடி இந்த லிக்விடை ஊற்றி தரைக்கு மாப் போட்டால் உங்களுடைய தரையும் பளிச் பளிச்சென மாறிவிடும்.

இதே போல எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த லிக்விடில் ஷாம்பு போடாதீங்க. பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 2 மூடி ஊற்றி கலந்து வச்சுக்கோங்க. இப்படி செய்தால் இந்த லிக்விடை பாத்திரம் தேய்க்கவும் நாம் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: என்ன! வெறும் பத்து ரூபாய்க்கு இத வாங்கினா கிச்சன், பாத்திரம், சிங்க் எல்லாமே பளிச்ன்னு மாறுமா?ஆச்சர்யமா இருக்குல வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

நம்முடைய விருப்பம் தாங்க. மலிவாக எலுமிச்சம் பழம் கிடைக்கும் போது வாங்கி இந்த லிக்விடை செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதத்திற்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எல்லா இடத்தையும் இந்த ஒரு லிக்விடை வைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். எலுமிச்சம்பழத் தோல்களை எல்லாம் சேமித்து வைத்து அந்த தோல்களை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கூட, குப்பையில் போடும் எலுமிச்சம்பழத் தோலில் இப்படி ஒரு லிக்விட் செய்து கொள்ளலாம். அதுவும் நம்முடைய புத்திசாலித்தனத்தில் தான் உள்ளது. உங்களுக்கு இந்த எளிமையான வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் கட்டாயம் முயற்சி செய்து பார்க்கவும்.

சற்று முன்