தேங்காய் சட்னியை கொஞ்சம் வித்தியாசமா இப்படி அரைச்சு தான் பாருங்களேன்! ரோட்டு கடை பாட்டி சட்னியின் சுவை தோத்து போயிரும்.

chutney

இட்லி தோசை பொங்கலுக்கு சுலபமாக செய்யக்கூடிய சட்னி என்றால், அது தேங்காய் சட்னி தான். சில ரோட்டோர கடைகளில் எல்லாம் இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக சூப்பர் தேங்காய் சட்னி இருக்கும். அந்த தேங்காய் சட்னியின் சுவை ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். குறிப்பாக பாட்டிகள் வைத்திருக்கும் இட்லி கடையில், தேங்காய் சட்னிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அப்படிப்பட்ட சுவையில் ஒரு விதமான சட்னியை தான் இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல நாளைக்கு காலைல இட்லியா? தோசையா? இந்த சட்னியை ட்ரை பண்ணி பார்க்கலாமே!

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. 1/2 மூடி அளவு தேங்காயை துருவி போட்டுக்கொள்ள வேண்டும். ஃபிரஷ்ஷாக உடைத்த தேங்காய் இருந்தால்தான் சட்னியின் சுவை சூப்பரா இருக்கும். காரமான பச்சை மிளகாய் – 1 அல்லது 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 1 பல், புதினா – 5 இலைகள், மல்லித்தழை – 2 இனுக்கு, புளி – சிறிய துண்டு, பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – சுவைக்கு ஏற்ப, சின்ன வெங்காயம் – ஒரு பல், இந்தப் பொருட்களையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

காரம் மட்டும் கொஞ்சம் அதிகம் தேவை. ரோட்டு கடை சட்னி என்றாலே காரசாரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதன் பின்பு இதை ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கெட்டியாகவோ அல்லது தண்ணீரிலோ கரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

chutney1

இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து கொட்டி பரிமாறி பாருங்கள். இதன் சுவை சூப்பராக இருக்கும்.

- Advertisement -

சுட சுட நாலு இட்லி கூட இப்படிப்பட்ட காரசாரமான தேங்காய் சட்னியை மேலே ஊற்றி சாப்பிட்டால் இதன் சுவை அலாதியாக இருக்கும். உங்களுக்கு வெள்ளை சட்னியோடு கொஞ்சம் சிவப்பு நிறத்தில் சட்னி இருந்தால் தான் பிடிக்குமா?

chutney2

அந்த மிக்ஸி ஜாரில் 5 அல்லது 6 வரமிளகாயை போட்டுக்கொள்ளுங்கள். 4 பூண்டுப் பல், கல்லுப்பு வைத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் வழித்து, கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து பரிமாறினால் சூப்பரான மிளகாய் சட்னி தயாராக இருக்கும். பொதுவாகவே இந்த சட்னியை அந்த காலத்தில் அம்மிக்கல்லில் அரைத்து பரிமாறுவார்கள். அப்போது அது இன்னும் கூடுதல் சுவையை கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது. உங்களுக்கு இந்த இரண்டு சட்னி படித்திருந்திருந்தா உங்க வீட்ல நாளைக்கு செஞ்சு பாருங்க.

இதையும் படிக்கலாமே
வெள்ளை முடிக்கு டை அடித்து இனி சிரமப்பட வேண்டாம். 15 நாட்களில் வெள்ளை முடியை, நிரந்தரமாக கருப்பாக மாற்ற இது ஒரு சூப்பர் டிப்ஸ். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.