- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉங்க வீட்ல 1/2 மூடி தேங்காய் இருக்கா? பிக்மென்ட்டேஷனுக்கு ஒரே இரவில் குட் பை சொல்லலாம்...

உங்க வீட்ல 1/2 மூடி தேங்காய் இருக்கா? பிக்மென்ட்டேஷனுக்கு ஒரே இரவில் குட் பை சொல்லலாம் வாங்க.

- Advertisement -

நம்முடைய முகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். கருவளையம், கரும்புள்ளி, பிக்மென்ட்டேசன், கொப்பளம், முகப்பரு, சுருக்கங்கள் இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்ப்பு தர பல கிரீம்கள் இருக்கிறது. பல ட்ரீட்மெண்டுகளும் இருக்குது. அதெல்லாம் நமக்குத் தேவை கிடையாது. வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில் பக்க விளைவுகள் இல்லாமல் சில விஷயங்களை பின்பற்றும்போது, அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யக்கூடிய அழகு குறிப்பு மட்டும்தான் தேவை என்பவர்களுக்காக இந்த பதிவு. வீட்டில் இருக்கும் தேங்காயை வைத்து இந்த இந்த அழகு குறிப்பானது சொல்லப்பட்டுள்ளது. இதனோடு இன்னும் ஒரு பொருள் மட்டும் கூடுதலாக கடையில் இருந்து வாங்கி சேர்க்க வேண்டும். அது எந்த பொருள், இந்த ஜெல்லை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய விரிவான குறிப்பு தேவை என்பவர்கள் பதிவை முழுமையாக படிக்க தெரிந்து கொள்ளலாம்.

பிக்மென்ட்டேஷனை குறைக்க ஜெல் தயார் செய்யும் முறை:
இதற்கு நமக்கு முதலில் 1/2 மூடி தேங்காய் தேவை. அதை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். 1 பெரிய டம்ளர் அளவு தேங்காய் பால் வருதுன்னு வச்சுக்கோங்க. அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை போட வேண்டும். இந்த ஆளிவிதை, flaxseed என்று சொல்லுவார்கள் அல்லவா. இதை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதமான தீயில் தேங்காய் பாலும், ஆளி விதையும் கொதிக்கட்டும். அடுப்பை முழு தீயில் வைத்து விட்டால் தேங்காய் பால் திரிந்துவிடும். பார்த்துக்கோங்க கவனமாக. ஆளி விதையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த தேங்காய் பாலில் இறங்கியதும், தேங்காய் பால் ஜெல்லி போல வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து, ஒரு காட்டன் துணியில் போட்டு உங்கள் கைகளை வைத்து நன்றாக பிழிந்து எடுக்க வேண்டும். பிழிந்து எடுப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யும்.

ஏனென்றால் இது கொழ கொழப்பாக மாறியிருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டு பிழிந்து எடுத்து விட்டால் சூப்பரான ஜல் கிடைத்துவிடும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்தால் 5 லிருந்து 7 நாட்கள் கெட்டுப் போகாது. இதை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் முகத்தில் தடவலாம். காலை, மாலை, மதியம், இரவு, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் முகத்தில் எடுத்து லேசாக தடவிக் கொள்ளுங்கள். முகம் முழுவதும் ஆங்காங்கே லேசாக இதை தடவி விட்டு, அப்படியே மசாஜ் செய்யும் போது இந்த ஜெல் உங்களுடைய சருமத்திற்குள் ஊடுருவி விடும்.

- Advertisement -

ஜெல் முகத்தில் காய்ந்ததும் அப்படியே விட்டு விடுங்கள். இரவு இதை இப்படி முகத்தில் தடவினால் மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவிக்கொள்ளலாம். பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்மணிகளாக இருந்தால் வேலையை எல்லாம் முடித்துவிட்டு இதை முகத்தில் தடவி விட்டு அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க. இரண்டு மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்த ஜெல்லை முகத்தில் பயன்படுத்தி வாருங்கள். முகத்தில் இருக்கும் அந்த கருத்திட்டுக்கள், பிக்மென்டேஷன் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும். அதுமட்டுமல்லாமல் உங்கள் முகத்தில் இருக்கும் மற்ற சரும பிரச்சனைகளுக்கும் எளிமையான முறையில் இது தீர்வு கொடுக்கும். சுருக்கத்தை எல்லாம் படிப்படியாக குறைத்து வயதான தோற்றத்தை தள்ளிப் போடும். முகப்பரு வந்து போன இடத்தில் சின்ன சின்ன பல்லங்கள் இருக்கும் அல்லவா அதை கூட ஒரு சில நாட்களில் இது சரி செய்து விடும்.

இதையும் படிக்கலாமே: கோதுமை மாவில் சூப்பரான பஞ்சு போல ஆப்பம் சுட தெரியுமா உங்களுக்கு? ஈஸ்ட் போடாம, சோடா உப்பு போடாம, ஹெல்த்தியான ஆப்பம் ரெசிபி இதோ உங்களுக்காக.

இந்த ரெமிடியை நாம் தேங்காய் வைத்து செய்திருப்பதால், ஆய்லி லிகின் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாமா என்ற கேள்வி வரும். தாராளமாக பயன்படுத்தலாம். கொஞ்சம் தேங்காய் பாலை மிச்சம் பிடித்து வயிற்றுக்கும் குடியுங்கள். அதுவும் உங்களுக்கு அழகு கொடுக்கக் கூடிய விஷயம் தான். இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள் அழகாக இருங்கள்.

சற்று முன்