உங்க வீட்ல வெங்காயம் இருக்கா? உடனே இந்த சட்னி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இதுவரை நீங்கள் ருசித்திடாத முற்றிலும் வித்தியாசமான சுவையில் வெங்காய சட்னி ரெசிபி.

chutney_tamil2
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் வெங்காய சட்னி ஒவ்வொரு மாதிரி அரைப்பார்கள். இன்று நாம் பார்க்க போகக்கூடிய ரெசிபி கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் ருசி நன்றாக இருக்கும். இட்லி தோசை வெரைட்டி ரைஸுக்கு தொட்டு சாப்பிட அருமையான வெங்காய சட்னி அரைப்பது எப்படி. ஒரே மாதிரி சட்னி அரைத்து ரொம்பவும் அலுத்து போய்விட்டது, எனும்போது இந்த சட்னியை முயற்சி செய்து பார்க்கலாம். வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் உங்களை பாராட்டுவார்கள்.

வெங்காய சட்னி செய்முறை:
முதலில் இரண்டு மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயங்களை நீலவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், தோலுரித்த பூண்டுப்பல் 2, போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்து லேசாக நிறம் மாறி வந்த பிறகு பச்சை மிளகாய் 3 அல்லது 4, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

பிறகு கருவேப்பிலை ஒரு கொத்து, தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து வெங்காயத்தை வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். வெங்காயத்தின் பச்சை வாடை நீங்கி வெங்காயம் லேசான பிரவுன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். ரொம்பவும் வெங்காயத்தை சிவப்பு நிறம் வரும் அளவிற்கு வதக்கி விட்டால் சட்னியின் நிறமும் சுவையும் மாறிவிடும் பார்த்துக்கோங்க.

இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆரட்டும். பிறகு மிக்ஸி ஜாரில் மாற்றி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைக்க வேண்டாம். ஓரளவுக்கு திக்காக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சட்னிக்கு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், தாளித்து போட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசி இருக்கும். சுட சுட இட்லி தோசைக்கு சூப்பரான வித்தியாசமான சைடிஷ் இது? குறிப்பாக புளிசாதம், எலுமிச்ச பழம் சாதம், அவல் உப்புமா, இப்படிப்பட்ட வெரைட்டி ரைசுக்கும் இதை தொட்டு சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: ரெண்டே நிமிஷத்துல தேங்காய், வெங்காயம், தக்காளி, எதையும் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி புதினாவை மட்டும் வெச்சு நல்ல ஹோட்டல் ஸ்டைல்ல சூப்பரான புதினா சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பின்குறிப்பு: இந்த சட்னியை பெரிய வெங்காயத்தில் தான் செய்ய வேண்டும். சின்ன வெங்காயத்தில் செய்யும் போது அதன் சுவை அவ்வளவு கூடுதலாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருக்கா. இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -