வறுமையை நீக்கக்கூடிய தேங்காய் பரிகாரம்.

coconut-lakshmi

வறுமையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன செய்தால் பிரச்சனை தீரும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். எப்படியாவது வறுமையின் பிடியிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் புதியதாக கடனை வாங்கிக்கொண்டு கூட பல பெரிய பரிகாரங்களை செய்வார்கள். ஏற்கனவே இருக்கும் கஷ்டத்தோடு கடன் பிரச்சனையும் சேர்ந்து விடும். கஷ்டமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு பணம் பறிக்கும் சிலரும் இந்த பூமியில் தான் இருக்கின்றார்கள். வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க சுலபமான பரிகாரங்களைக் கூறும் மனிதர்களும் இதே பூமியில் தான் இருக்கின்றார்கள். என்ன செய்வது? எல்லாவற்றையும் கடந்து வாழ வேண்டிய கட்டாயம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது. கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் நாம் செய்யும் பரிகாரங்களில் எது நமக்கு நன்மை தரும் என்பதை சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்று. பரிகாரங்கள் நன்மைகள் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. இருக்கும் கஷ்டத்தோடு சேர்த்து மேலும் மேலும் கஷ்டத்தை தராமல் இருந்தாலே போதும். வறுமையில் இருப்பவர்களின் கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

coconut

முதலில் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு பன்னீர் தெளித்து, சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த இடமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தலைவாழை இலையை சாமி படத்திற்கு முன்பு வைத்து, அதன்மேல் மஞ்சள் குங்குமம் வைத்த தேங்காய் ஒன்றை வைக்கவும். ஒரு தாம்பூலத்தில் 108 என்ற கணக்கில் மல்லிகை பூவையும், சிறிதளவு குங்குமமும் எடுத்துக் கொள்ள வேண்டும். (மல்லிகைப்பூ இல்லாவிட்டால் வாசனை மிக்க எந்த குருவாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்) அந்த 108 மல்லிகைப் பூவில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாழை இலையின் மீது வைத்திருக்கும் தேங்காய் மேல் போட்டு, அதனுடன் சிறிதளவு குங்குமத்தையும் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் இந்த மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிப்பது வறுமையைப் போக்கும் சிறந்த வழியாகும். உங்களுக்கான மகாலட்சுமி மந்திரம் இதோ.

வறுமையை போக்கும் மகாலட்சுமி மந்திரம்:

swastik symbol benefits tamil

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா

- Advertisement -

இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்வது மிகவும் சிறந்தது. 108 முறை மந்திரத்தை உச்சரித்த பின்பு ஒரு மஞ்சள் நிற துணியில் அந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் அழுத்தமாக கட்டி வீட்டு வாசற்படியின் மேல்பகுதியில் நடுவே கட்டி தொங்கவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்வதில் சிறந்தது. பழைய தேங்காயை எடுத்து ஓடும் நீரில் போட்டுவிடலாம். துணியை துவைத்து மீண்டும் அதே துணியை பயன்படுத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. பௌர்ணமியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானது. இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த பரிகாரத்தை நம் வீட்டிலும் செய்யலாம். தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே
இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Coconut pariharam in Tamil. Mahalakshmi manthiram in tamil. Mahalakshmi Mantra Tamil. Mahalakshmi valipadu in tamil.