குக்கரில் தக்காளி சட்னி ரெசிபி! கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஈஸியான இந்த சட்னியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

red-chutney
- Advertisement -

வெங்காயம் தக்காளி சேர்த்து நாம் செய்யக்கூடிய சட்னியை எப்போதும் வதக்கி தானே செய்வோம். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக குக்கரில் வெங்காயம் தக்காளியை வேக வைத்து இப்படி ஒரு முறை சட்னி செய்து பாருங்கள். இதன் ருசி மிக மிக அருமையாக இருக்கும். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். தேங்காய் சேர்க்காமல் இந்த சட்னியை அரைத்தால் அடுத்த நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

onion

முதலில் ஒரு குக்கரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2 ஓரளவு பொடியாக நறுக்கியது, பழுத்த தக்காளி பழம் – 3, சிறு துண்டுகளாக வெட்டியது, தோல் உரித்த பூண்டு பல் – 4, வர மிளகாய் –  5, சிறிய துண்டு – புளி, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, மல்லி தழை – 4 இனுக்கு, தேவையான அளவு உப்பு, வெல்லம் – 1/2 ஸ்பூன், நல்லெண்ணை – 3 ஸ்பூன் இந்த பொருட்களை சேர்த்து குக்கரை மூடி போட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். வெங்காயம் தக்காளி உப்பு சேரும் போது தானாக தண்ணீர் விடும். விசில் வந்து பிரஷர் அடங்கியவுடன் அடுப்பை திறந்து பார்த்தால், வெங்காயம் தக்காளி விழுது தண்ணீர் விட்டிருக்கும். அடுப்பை பற்ற வைத்து முழு தீயில் வைத்து, குக்கரில் வெங்காயம் தக்காளியுடன் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் சுண்ட வைத்து கொள்ளுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடத்திற்குள் தண்ணீர் அனைத்தும் சுண்டி விடும். இந்த விழுதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். சட்னியை கெட்டியாக தான் அரைத்துக் கொள்ள வேண்டும்.

thakkali

சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணையில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வர மிளகாய் தாளித்து சட்னியில் கொட்டி இந்த சட்னியை இட்லி தோசைக்கு பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கு தேவைப்பட்டால் வெங்காயம் தக்காளியை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி தேங்காய் துருவலை போட்டு அரைத்தாலும் இந்த சட்னியில் சுவை கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால் சட்னி சீக்கிரத்தில் கெட்டுப் போய்விடும். அடுத்த நாள் எடுத்து வைத்து சாப்பிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

pressure-cooker

வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கும் நேரம் மிச்சமாகிறது. காலையில் அவசர நேரத்தில் சட்னி அரைப்பதாக இருந்தால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி சட்னி அரைச்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்களால் பெரியதாக வித்தியாசம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. வதக்கி அரைக்கும் சட்னியின் சுவைக்கும், வேகவைத்து அரைக்கக்கூடிய சட்னியின் சுவைக்கும். ருசி ஒன்று போலத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ட்ரை பண்ணுங்க. சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க.

- Advertisement -