இப்படி சமையல் செய்றவங்க வீட்ல, தெரியாம கூட, யாரும் போய் சாப்பிடாதீங்க! நீங்களும் உங்களுடைய வீட்ல இப்படி சமைக்கவே கூடாது. பிரச்சினைகள் வராமல் தடுக்க இதுவும் ஒரு வழி.

cooking

ஒரு வீட்டின் சமையல் அறையில் அந்த குடும்பத்தின், ஆரோக்கியம் மட்டும் தான் அடங்கி உள்ளது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. அந்த குடும்பத்தில் வரக்கூடிய மற்ற எல்லா கஷ்டங்களுக்கும் கூட, சமையலறையில் சமைக்கும் உணவுப் பொருட்களும் ஒரு காரணமாக இருக்கலாம். நம்ப முடியவில்லையா? ஒரு வீட்டில் பெண்கள் சமைக்கும் போது எப்படி சமைக்கவேண்டும்? எப்படி சமைக்க கூடாது என்பதை பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women4

ஒரு பெண் சமையல் அறைக்குள் நுழையும்போது குழப்பமான மனநிலையோடு நுழையக்கூடாது. அந்த சமையலை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்திருப்பது பொதுவாகவே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும், சில பேர் என்ன செய்வார்கள் என்றால், தன் குடும்பத்துக்கு சமைக்கக்கூடிய சாப்பாட்டை நல்ல சாப்பாடக தான் சமைப்பார்கள். நல்லெண்ணத்தோடு தான் இருக்கும்.

ஆனால், அடுத்தவர்களை திட்டிக்கொண்டே சமைப்பார்கள். அவர்களுக்கு தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது தொல்லை கொடுக்கும் சொந்தகாரர்கள் ‘நல்லாவே இருக்க கூடாது. நாசமாகப் போக வேண்டும் என்ற வார்த்தைகளை உச்சரித்து கொண்டு’ புலம்பிக்கொண்டே சமைக்கும் பெண்களையும் நாம் பார்த்திருப்போம்.

women1

இந்த இடத்தில், சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மனதில் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து சமைக்கவில்லை. இருப்பினும் அவர்களுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் தாக்கம், கட்டாயம் அந்த சமையலில் இருக்கும் அப்போது, அந்த சமையலை சாப்பிடும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் அந்த எதிர்மறை ஆற்றல் போய் சேரும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

- Advertisement -

இதே சாப்பாட்டை உங்கள் வீட்டில் வரும் விருந்தினர்களுக்கு கொடுத்தால் கூட, அந்த எதிர்மறை ஆற்றல் உங்களுடைய விருந்தினரையும் போய் சேரும்.  இப்போது புரிகிறதா? சில சமயங்களில், யார் வீட்டுக்காவது போய் சாப்பிட்டு வந்து, நமக்கு நேரம் சரியில்லாமல், உடல்நிலை சரி இல்லாமல் போவதற்கு என்ன காரணம் என்று. உங்களுக்கு தெரிஞ்சவங்க வீட்லயோ, சொந்தக்காரங்க வீட்டுல, பெண்கள் இப்படி சமைக்கிறாங்கண்ணா, அவங்க வீட்டுக்கு போய் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.

cook1

ஆகவே, உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்கும்போது எதிர்மறை பேச்சுகளை உச்சரித்துக் கொண்டு சமைக்கக் கூடாது என்பதை, பெண்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் சமைக்கும் சாப்பாடு உங்களுடைய பிள்ளைகளுக்கு பிரசாதமாக மாறவேண்டும். அமிர்தமாக இருக்க வேண்டும். என்ற நினைப்போடு நேர்மறை சிந்தனையோடு சமைக்கும் பட்சத்தில், அதை சாப்பிடும் உங்களது குடும்ப உறுப்பினர்களு,ம் உடல் ஆரோக்கியத்தோடு, கஷ்டங்கள் இல்லாமல், நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கோவிலில் கொடுக்கப்பட்ட பிரசாதம் போல் உங்களது சாப்பாடும் கட்டாயம் மாறும்.

samayal

இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த குறிப்பு உங்களுக்கு சின்ன டிப்ஸாக தெரியலாம். இருப்பினும், இதை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீடும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் உங்கள் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தால் கூட, அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். நீங்கள், உங்கள் வீட்டு மஹராசியாக மாற வேண்டும் என்றால் இந்த ஒரு டிப்ஸ் போதுமே. முயற்சி செய்து தான் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கைக்கு வந்து சேரும் வருமானத்தை வீண் செலவு செய்யாமல், பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்ற வித்தையை கற்றுக் கொள்ள, இதை மட்டும் செஞ்சு பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.