மணமணக்கும் கருவேப்பிலை குழம்பை யாராலும் இப்படி வைக்கவே முடியாது. ஆரோக்கியமான முடி வளர்ச்சி தேவை என்பவர்கள் கூட இந்த குழம்பை வாரத்தில் 1 நாள் செஞ்சு சாப்பிடலாம்.

kauvepilai-kuzhambu
- Advertisement -

கருவேப்பிலையை எப்படி சாப்பிட்டால் என்ன. நம்முடைய உடம்புக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கப்போகுது. தலைமுடி வளரப்போகுது. அதற்காக கருவாப்பிலையை ஒரு குழம்பு வைத்து சாப்பிடுவோமே. சுட சுட சாதத்தில் இந்த கருவேப்பிலை குழம்பை ஊற்றி, அப்படியே நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ வீட்டு பிசைந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறுது பார். அப்படிப்பட்ட கருவேபிலை குழம்பை பக்குவமாக எப்படி செய்வது. ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் இதற்கு பச்சை பசேலனை இருக்கும் கருவேப்பிலை தேவை. ஒரு கைப்பிடி கருவேப்பிலைகளை நன்றாக கழுவி தண்ணீரை வடிய வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து மீடியம் சைஸ் எலுமிச்சம் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். புளியை திக்காக கரைக்கக் கூடாது. நீர்க்கக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 800ml தண்ணீரில் இருந்து 1 லிட்டர் அளவு தண்ணீர் வரை ஊற்றி இந்த புளி கரைசலானது நீர்க்க இருக்க வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது இந்த கருவாப்பிலை குழம்புக்கு ஒரு மசாலா வறுத்து அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வச்சுக்கோங்க. அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1/4 ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் 10, இந்த பொருட்கள் எல்லாம் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

இறுதியாக இதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாப்பிலையை ஒரு பெரிய கைப்பிடி அளவு போட்டு, அதையும் வறுத்துக்கொள்ளுங்கள். ரொம்பவும் மொறுமொறுப்பாக வறுக்க வேண்டாம். அந்த சிடசிடப்பு அடங்கும் வரை வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த சூட்டிலேயே கடாயில் இந்த பொருட்கள் எல்லாம் இருக்கட்டும். நன்றாக ஆரட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வறுத்து வைத்திருக்கும் இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குழம்பை தாலுக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் 10 பொடியாக நறுக்கியது போடுங்க. இந்த பூண்டு எண்ணெயிலேயே 3 லிருந்து 4 நிமிடம் வதங்கட்டும்.

அடுத்து கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் இதோடு போட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விடுங்கள். இறுதியாக குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு, குழம்பை கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் வெங்காயம் மட்டும் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு அசத்தலான கெட்டி சட்னி நாவூறும் சுவையில் இப்படியும் நொடியில் செய்து சாப்பிடலாமே!

குழம்பு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வேண்டும். புளியின் பச்சை வாடை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது, சின்ன துண்டு வெல்லத்தை இதில் சேர்த்து கலந்து பரிமாறலாம். வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அதை தவிர்த்துக் கொள்ளலாம். இந்த குழம்பு சாதத்துடன் ஒரு வத்தல் இருந்தால், ஒரு குண்டான் சோறு இருந்தா கூட பத்தாது, பார்த்துக்கோங்க. உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -