என்ன குழம்பு வெக்கிறதுன்னு யோசனையா இருக்கா? ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை இருக்கா? யோசிக்காம இந்த குழம்பு வையுங்க.

kuzhambu
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கும். குழம்பு வைக்கும் நேரத்தைவிட, என்ன செய்யலாம் என்று யோசிக்க நேரம் அதிகமாக எடுக்கும். வீட்டில் காய்கறி எதுவும் இல்லை. கருவேப்பிலை இருக்கிறது. வெங்காயம் தக்காளி உள்ளது, மற்றும் மளிகை ஜாமான்கள் எல்லாம் உள்ளது. யோசிக்கவே யோசிக்காதீங்க. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கருவேப்பிலை குழம்பை செஞ்சுடுங்க. சுடச்சுட சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் எவ்வளவு சாந்தம் வயிற்றுக்குள் இறங்குவது என்றே தெரியாது. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிந்துகொள்வோமா.

vaththa-kuzhambu4

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 4, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 ஓரளவுக்கு பொடியாக நறுக்கியது, தக்காளி பழம் – பாதி, இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும். இருதியாக ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். கருவேப்பிலை எண்ணெயில் பச்சை வாடை நீங்கும் வரை வறுபட வேண்டும்.

- Advertisement -

கொழுந்து கருவேப்பிலையாக இருந்தால் அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும். அடுத்து இறக்குவதற்கு முன்பு 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

onion1

சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சின்னவெங்காயம் சுருங்கி வரும் வரை மூன்று நிமிடம் போல வதக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள்.

karuveppilai-kuzhambu

அடுத்தபடியாக மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து மசாலாவை ஒரு முறை பிரட்டி விட்டு, புளி கரைசலை ஊற்றி, தேவைப்பட்டால் குழம்புக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, குழம்புக்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் குழம்பை கொதிக்க விடுங்கள். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான காரசாரமான கருவேப்பிலை குழம்பு தயார்.

- Advertisement -