தானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்! பிறகு தானம் செய்யலாம்.

cow-dhanam
- Advertisement -

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்றெல்லாம் கூறுவது உண்டு. உண்மையிலேயே தானம் செய்ய நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய தானம் ஒன்று உண்டு. இந்த தானம் செய்பவர்களுக்கு ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும். மேலும் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அது என்ன தானம்? நாம் எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

cow

நாம் பிறந்தது முதல் இறக்கப் போகும் தருவாய் வரை நம்முடைய உயிர் மூச்சை கொடுக்கும் தாய்ப்பால் ஆக இருப்பது நம் தாயில் இருந்து வரும் உதிரம் மட்டுமல்ல. பசுவிடம் இருந்து வரக்கூடிய பாலையும் குடித்து தான் வளர்க்கின்றோம். தாய் பாலை விட, பசுவின் பாலை குடித்து வளர்வது தான் அதிகம். அத்தகைய தாய்க்கு இணையாக இருக்கும் பசுவினை போற்றி வணங்குபவர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னவோ அபரிமிதமானவை.

- Advertisement -

நீங்கள் எந்த பாவம் செய்திருந்தாலும் அதற்கான பரிகாரம் உண்டு ஆனால் பசு வதை என்னும் பாவத்திற்கு எந்த லோகத்திலும், எந்த ஜென்மத்திலும் பரிகாரம் என்பது கிடையாது என்கிறது சாஸ்த்திரம். அந்த அளவிற்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்த பசுவினை பற்றிய விஷயங்களைத் தான் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தானம் செய்பவர்கள் முதலில் பசுவிற்கு தானம் செய்வது மோட்சத்திற்கு வழி வகுக்கும். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

agathi-keerai-dhanam

ஒவ்வொரு அமாவாசை தோறும் அகத்திக் கீரையை பசுவிற்கு கொடுப்பது வழக்கம். இதை தவறாமல் கடைபிடித்து வருபவர்களுக்கு நரகத்தில் இடமில்லை. அது போல நாம் அறியாமல் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தமாக அடிக்கடி பசுவிற்கு தானம் செய்ய வேண்டும். அதாவது பசு வளர்ப்பவர்களிடம் பசுவிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது அல்லது பசுவின் பசியை ஆற்றுவது போன்ற செயல்களை செய்யும் பொழுது ஈரேழு ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் நீங்கி விடும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

பசுவிற்கு தேவையான உதவிகளை செய்ய பணமாகவும் தானம் செய்யலாம். அல்லது பசுவிற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுக்கலாம். கோவில்களில் விடப்பட்டிருக்கும் பசுக்களுக்கு உங்கள் கைகளால் உணவு கொடுப்பது என்பது இன்னும் அதிகமான பலன்களை கொடுக்கும் ஆற்றல் படைத்தது. குடும்பத்துடன் கோவில்களில் இருக்கும் பசுக்களுக்கு வாழைப்பழம் தானம் கொடுப்பது, பச்சரிசியும், வெல்லமும் கலந்த கலவையை தானமாக கொடுப்பது போன்றவற்றை செய்து வந்தால் வறுமை என்பதே வாழ்வில் நிலைக்காமல் போய்விடும்.

banana-for-cow

செல்வ செழிப்புடன் ஒருவர் வாழ பசுவிற்கு ஊழியம் செய்ய வேண்டும். ஈன்றெடுத்த தாயிடமிருந்து நாம் பெற்ற பாலை விட தன் கன்றுகளுக்கு கொடுக்க வேண்டிய பாலை மனிதர்களாகிய நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் பசுவின் பாலானது மிகவும் புனிதமானது. நல்ல நாள், விசேஷங்களின் போது இல்லாத ஏழை குழந்தைகளுக்கு பசும்பால் தானம் செய்து வாருங்கள். எவ்வளவோ செலவு செய்து வீண் ஆடம்பரத்தை வளர்ப்பதை விட, உங்களால் இயன்றவர்களுக்கு பொருளுதவி, பண உதவி போன்றவற்றை செய்து வந்தால் வாழ்க்கையில் எந்த விதமான துன்பங்களும் நேராமல் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது சாதாரண பழமொழி அல்ல அப்பழமொழிக்கு பின்னால் எவ்வளவோ அர்த்தங்கள் ஒளிந்து உள்ளன என்பதை செய்து பார்க்கும் பொழுது தான் நம்மால் உணர முடியும். தானம் செய்யும் ஆசை உள்ளவர்கள் முதலில் பசுக்களுக்கு தானம் செய்யுங்கள், அற்புதமான பலன்களை பெறலாம்.

- Advertisement -