இந்த தானத்தை வாழ்நாளில் ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும். விடாமல் உங்களை துரத்தி அடிக்கும் தரித்திரம் சுவடே தெரியாமல் அழிந்து போகும்.

dhanam
- Advertisement -

நம்மை விடாமல் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை இருக்கும் இடம் தெரியாமல், அழிப்பதற்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தானங்களில் நிறைய வகை தானங்கள் உண்டு. அன்ன தானம், வஸ்திர தானம், பூமி தானம், கோ தானம், கம்பளி தானம், செருப்பு தானம், சுவர்ண தானம், நெய் தானம் இப்படி தானங்களை நாம் பட்டியலிட்டு கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தானங்களில் பட்டியலில் மிக மிக முக்கியமான தனமாக சொல்லப்பட்டிருப்பது தீப தானம்.

dhanam

இந்த தீப தானத்தை எவரொருவர் செய்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கக்கூடிய தரித்திரம் அவர்களை விட்டு உடனடியாக நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீண்டநாட்களாக தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பம் கஷ்டத்தில் இருக்கின்றது. என்ன தான் கஷ்டப்பட்டாலும் அந்த குடும்பம் தலை தூக்க முடியவில்லை. பண கஷ்டம் இருந்து கொண்டே வருகிறது. வீட்டில் நிம்மதி கிடையாது. தரித்திரம் பிடித்த வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படி பட்ட கஷ்டம் உள்ள ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டுமென்றால், வறுமையிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த தீப தானத்தை செய்யலாம் என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

நிறைய பேர் தீப தானம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் தீப தானம் செய்வதற்கு சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. உங்களுடைய வீட்டில் உங்களுடைய குல வழக்கப்படி உங்களுடைய முன்னோர்களை கேட்டு இந்த தீப தானத்தை செய்தாலும் சரிதான். இல்லை எங்களுக்கு யாரும் தெரியாது. எங்களுடைய முன்னோர்களுக்கும் இந்த தீப தானத்தை பற்றி தெரியாது என்றால் பின் சொல்லக்கூடிய விதிமுறைகளை பின்பற்றி தீப தானத்தை செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

vilaku

தீப தானத்திற்கு நமக்கு தேவை ஒரு விளக்கு. தீபம் என்றால் விளக்கு தானே. மண் அகல் விளக்கு, வெள்ளியில் விளக்கு, தங்கத்தில் விளக்கு, பித்தளையில், செம்பில் இப்படி எந்த உலோகத்தில் உங்களுடைய சக்திக்கு விளக்கு வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். இந்த விளக்கை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். எந்த கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

இந்த தீப தானத்தை கட்டாயமாக ஒரு பிராமணருக்கு தான் கொடுக்க வேண்டும். நீங்கள் யாருக்கு இந்த விளக்கை தானமாக கொடுக்கப் போகிறீர்களோ குறிப்பிட்ட அந்த நபரை கோவிலுக்கு வரச் சொல்லி விடவேண்டும். கோவிலில் வைத்து நீங்கள் எடுத்துச் சென்ற விளக்கை நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, உங்கள் கையிலிருந்து இந்த விளக்கை தானமாக, குறிப்பிட்ட அந்த பிராமணருக்கு கொடுத்துவிட வேண்டும். நீங்கள் எந்த கோவிலில் தானம் கொடுக்கிறார்களோ அந்த இறைவனுக்கு முன்பாக இந்த தானம் கொடுக்கப்பட வேண்டும். அந்த நபர் விளக்கை பெற்றுக் கொண்டு கோவிலை ஒரு முறை வலம் வந்து எரிகின்ற தீபத்தை இறைவன் சந்நிதானத்தில் வைத்து விட வேண்டும்.

deepam8

அவ்வளவு தாங்க. இந்த தீபம் எண்ணெய் தீரும் வரை அந்த கோவிலிலேயே எரிந்து முடியட்டும். அதன்பின்பு தானம் பெற்றவர் அந்த தீபத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி எரிகின்ற தீபத்தை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. மனத் திருப்தியோடு ஆத்மார்த்தமாக இந்த தீப தானத்தை செய்யும் பட்சத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி இந்த மூன்று பேரின் அருள் ஆசியையும் நிறைவாக நம்மால் பெறமுடியும். இதோடு மட்டுமல்லாமல் புதன் கிரகத்தின் தோஷங்களும் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

temple

அதேசமயம் வீட்டிலிருந்து தீப தானத்தினை நாம் செய்யக்கூடாது. அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று தான் இந்த தீப தானம் செய்யவேண்டும். நிச்சயமாக இந்த தானத்தை கொடுப்பவரும் நன்றாக இருப்பார்கள். இந்த தானத்தை மனநிறைவோடு பெறுபவர்களும் நன்றாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள், வீட்டில் ரொம்பவும் வறுமை நிலையால் வாடி கஷ்டப்படுபவர்கள், இந்த தானத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -