இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப ரொம்ப ஈசியான குருமா. குருமா வைத்த அடுத்த 10 நிமிடத்தில் 10 இட்லி தட்டிலிருந்து காணாம போயிருக்கும்.

idly sambar
- Advertisement -

சுடச்சுட இட்லி தோசையோடு இந்த குருமா தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடலாம். மசாலா வாசம் நிறைந்த ரொம்ப ரொம்ப ஈசியான குருமா எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் சாதாரணமாக வைக்கக்கூடிய குருமாவில் இருந்து முற்றிலும் வித்தியாசமான இந்த குருமா ரெசிபியை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க. வாங்க ரெசிபிக்கு உள்ள போகலாம்.

இந்த குருமா செய்வதற்கு முதலில் ஒரு ஸ்பெஷல் தேங்காய் அரவையை அடைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் – 1/2 மூடி, பட்டை – 2 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4 லிருந்து 5 காரத்திற்கு ஏற்ப, மிளகு – 4, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு 1 இன்ச் தோல் சீவிய – இஞ்சி, பூண்டுப்பல் – 10, இந்த இரண்டு பொருட்களையும் ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு அரைப்பதை விட இப்படி நன்றாக இடித்து சேர்க்கும்போது சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.

இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இடித்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டை அந்த எண்ணெயில் போட்டு பொன் வறுவலாக வறுத்து, அதன்பின்பு பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 1 போட்டு நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

தக்காளி வதங்கும் போதே குருமாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து வதக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த குருமாவை கொதிக்க வையுங்கள். நிறைய கொதிக்கக் கூடாது. லேசாக 2 நிமிடம் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி, சுட சுட பரிமாறினால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

சட்டென ஒரு குருமா வைக்க வேண்டும். அதுவும் சுவையான மசாலா வாசம் நிறைந்த குருமாவாக இருக்க வேண்டும் எனும்போது இந்த குருமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த குருவுக்கு 10 இட்லி, 10 தோசை வைத்தாலும் பத்தாது. மிஸ் பண்ணாம உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -