அனைவரது வீட்டிலும் ரசம் வைப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு முறை இந்த பக்குவத்தில் ரசம் வைத்து பாருங்கள். நீங்கள் வைக்கும் ரசத்தை விட சற்று வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்

tomato-rasam-recipe
- Advertisement -

ஐந்து மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பது முன்னோர் வாக்கு. அந்த அளவிற்கு மிளகின் காரம் விஷத்தையும் முறிக்கும் வல்லமை படைத்தது. எனவே எப்பொழுதும் சாப்பிட்டு முடித்தவுடன் இறுதியாக ஒரு பிடி சாதத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவது உடலுக்கு எந்தவிதத் தீங்கும் வராமல் தடுக்கிறது. அஜீரண கோளாறு உள்ளவர்களும், வாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்கவும் தினமும் உணவில் ரசத்தை சேர்த்துக் கொள்வது நன்மையாகும்.

எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் அந்த விருந்தில் ரசம் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு உணவுகளில் தினமும் ஒன்றாக இருக்கும் இந்த ராகத்தை இப்படி ஒருமுறை செய்து பாருங்கள். எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று அதிகப்படியான சுவையுடன் இருக்கும். வாருங்கள் சுவையான இந்த தக்காளி, மிளகு ரசத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, புளி – நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 6, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒன்றரை ஸ்பூன், பூண்டு – 10 பல், – பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை:
முதலில் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு, ஒன்றரை ஸ்பூன் சீரகம், 10 பல் பூண்டு மற்றும் ஆறு வரமிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு தக்காளியை நான்காக அரிந்து சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, அதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

பிறகு கைகளினால் இந்த கலவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் பொடியாக்கி வைத்துள்ள மசாலாவை இவற்றுடன் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். இவற்றை எந்த அளவிற்கு கைகளை வைத்து பிசைந்து கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரசத்தின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

பிறகு ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த புளி கரைசலை கரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இந்த ரசத்தை கடாயில் ஊற்றவேண்டும். ரசம் சூடாகி நுரை கட்டியதும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -