2 பொருள் இருந்தால் போதும் சூப்பரான சப்பு கொட்டும் சுவையில் தக்காளி சட்னி ஈசியாக தயாரிக்கலாமே! சட்னி செய்ய இனி எதுக்கு கஷ்டப்படணும்?

tomato-chutney0_tamil
- Advertisement -

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் காரசாரமான தக்காளி சட்னி வைத்துக் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் என்று தோன்றும். நாவின் சுவையரும்புகளை தூண்டும் இந்த தக்காளி சட்டினியை ரெண்டே பொருள் வைத்து எப்படி சுலபமாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – பத்து, சாம்பார் தூள் – ரெண்டு டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை 

தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் 10 பழுத்த நல்ல தக்காளியாக பார்த்து தேர்ந்தெடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை நறுக்கும் போது பின்புறமாக திருப்பி நறுக்கினால் ரொம்ப சுலபமாக சாறு வெளியில் வராமல் நறுக்கிக் கொள்ளலாம். அதே போல தக்காளியின் காம்பு பகுதியை நீக்கி விட வேண்டும். அப்படியே போடக்கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தில் தக்காளி பழங்களை போட்டு நன்கு கைகளால் பிசைந்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை தாராளமாக விடுங்கள். தக்காளி எண்ணெயிலேயே பிரிந்து வரும். நல்லெண்ணையை தவிர மற்ற எண்ணெய்களை பயன்படுத்தினால் சுவை குறையும் எனவே நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாம்பார் பொடியை சேருங்கள். சாம்பார் பொடி கரைந்து விடக்கூடாது, லேசாக பச்சை வாசம் போக வதக்குங்கள். சாம்பார் பொடி இல்லை என்றால் அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் பயன்படுத்தலாம்.

பின்னர் நீங்கள் கரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை மிதமான தீயிலேயே வைத்து நன்கு வதக்கி விடுங்கள். மூடி போட்டு அவ்வப்பொழுது இடையிடையே கிண்டி விடுங்கள். அப்பொழுதுதான், மேலே தெறிக்காமல் இருக்கும். நன்கு சுண்டி கெட்டியாக எண்ணெய் பிரிந்து மேலே தெளிந்து வந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டியது தான்.

- Advertisement -

ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த காரசாரமான தக்காளி செய்வதற்கு பத்து நிமிடம் கூட எடுக்காது. இரண்டே பொருளை வைத்து சட்டுனு தயாரிக்க கூடிய இந்த தக்காளி சட்னிக்கு தாளிக்க வேண்டும் என்றால் நீங்கள் தாளித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அப்படியேவும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே:
மொறு மொறுன்னு கீரை வடை சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அடிக்கடி ரோட்டு கடையில் போய் இந்த வடையை நீங்கள் சாப்பிடுபவர்களாக இருந்தால், இனி இதை வீட்டிலேயே சுட்டு சாப்பிடலாமே.

தாளிக்க விரும்புபவர்கள் தாளிக்க அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டினால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி தக்காளி சட்னியை ஈசியாக ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -