நாளை துர்காஷ்டமி அன்று துர்க்கையை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் போதும் எதிரிகள் உங்கள் பெயரை கேட்டாலே அலறி அடித்து ஓடி விடுவார்கள்.

durgai manthiram
- Advertisement -

துர்கா தேவியின் சொரூபமான 64 யோகினிகளும், வாராகி, நாரசிம்ஹி, சாமுண்டி, பிராம்மி, இந்திராணி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்றும் துடியான நாள் இது என்று புராண நூல்கள் சொல்கிறது. நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை துர்காஷ்டமி என்றும் புராணங்கள் சொல்கிறது. இந்த நாளுக்கு மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் உண்டு.

இந்த துர்கா அஷ்டமி தினத்தில் துர்க்கையின் நெற்றியில் இருந்து சாமுண்டா என்ற உக்கிர தெய்வம் தோன்றி சண்டன், முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை அழித்த சர்வ வல்லமை படைத்த தினமாகவும் இதை சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தினத்தில் அம்பாளை நாம் வழிபடும் போது எதிரி தொல்லையிலிருந்து முழுவதுமாக விடுபட்டு பயமின்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரிகள் தொல்லை நீங்க துர்காஷ்டமி வழிபாடு
இன்றைய தினத்தில் துர்க்கை அம்மனை வீட்டில் வணங்குபவர்கள் முல்லை, மல்லிகை, தாமரை போன்ற மலர்களை சூட்டி சாம்பிராணி தூபம் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அகல் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும் இவருக்கு நெய்வேத்தியமாக தேங்காய் சாதம், கொண்டைக்கடலை வைக்க வேண்டும்.

வீட்டில் வணங்குவதை காட்டிலும் இன்றைய தினத்தில் துர்க்கை அம்மனை ஆலயம் சென்று வணங்குவது மிகவும் நல்லது. அதுவும் அவர்களுக்கு உரித்தான ராகு காலத்தில் வணங்குவது மேலும் சிறப்பு. அந்த நேரத்தில் அன்னைக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றி சிகப்பு நிற வஸ்திரத்தை வாங்கி கொடுத்து அணிவித்து வழிபட வேண்டும். இதே நெய்வேத்தியங்களை நாம் ஆலயத்தில் வைத்தும் வழிபாடு செய்யலாம் அத்துடன் அன்னையை தேவி அஷ்டகந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். அது தான் இந்த வழிபாட்டில் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மந்திரம்
ஹா தேவீம் மஹா சக்திம்
பவானீம் பவ வல்லபாம்
பவார்தி பஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோக மாதரம்.

இதே மந்திரத்தை நீங்கள் வீட்டில் வழிபாடு செய்தாலும் பூஜை செய்த பிறகு தேவியின் படத்தின் முன் அமர்ந்து இதை சொல்லி வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குறையாத செல்வம் கிடைக்க கணபதியை இப்படி வழிபட்டாலே போதும்.

இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த துர்காஷ்டமி நாளே எதிரிகளை வதம் செய்த நாளாக கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் இதை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இத்தனை சிறப்பு மிக்க நாளில் நம்முடைய எதிரி தொல்லைகள் நீங்க நாமும் இந்த முறையில் வழிபட்டு அன்னையின் அருள் ஆசையை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்

- Advertisement -