இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பருப்பு சேர்க்காமல் இந்த உடனடி சாம்பாரை நீங்களும் செய்து பாருங்கள். இதன் சுவையில் அனைவரும் அசந்து போய்விடுவீர்கள்

sambar
- Advertisement -

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி, சாம்பார், குருமா என விதவிதமான சைடிஷ்கள் இருக்கின்றன. ஆனால் அதிகமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவது சாம்பார் மற்றும் சட்னியை தான். இதனை எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காத சுவையில் இருக்கும். ஆனால் சாம்பார் வைப்பதற்க்கு சற்று நேரம் கூடுதலாக செலவாகும். பருப்பு வேகவைத்து, தக்காளி வெங்காயங்களை தாளித்து, பின்னர் பருப்பை கடைந்து சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். எனவே திடீரென அவசரத்திற்கு சமைக்கும் பொழுது அதனுடன் தொட்டுக்கொள்ள சாம்பார் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இந்த உடனடி சாம்பாரை வைத்து பாருங்கள். இதன் சுவை பருப்பு சேர்த்து செய்யும் சாம்பாரை விட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1, தக்காளி – 7, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3, மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் 10 பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தோலுடன் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இதனுடன் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து 7 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரில் 6 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு, குக்கரில் பிரஷர் குறைந்ததும், மூடியைத் திறந்து அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த தக்காளி வெங்காயத்தை பருப்பு கடையும் மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை பொறிக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை இந்த கடாயில் ஊற்றி லேசாக கலந்து விட்டு, கடைந்து வைத்துள்ள கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஐந்து நிமிடம் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -