இந்த சின்ன சின்ன சமையல் குறிப்புகள் நீங்கள் எளிதாக சமைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்

cooking tips in Tamil
- Advertisement -

திருமணமான இளம் பெண்களுக்கு சமையலறைக்குள் நுழைவதென்பது ஒரு போர்க்களத்திற்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சமைப்பதில் பெரும்பாலும் அவர்களுக்கு எந்தவித முன்னனுபவமும் இருந்திருக்காது. புதியதாக சமைக்கும் போது எந்தவித தவறும் செய்துவிடக் கூடாது என்ற பயம் அவர்களை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கும். அதோடு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு தெரிந்த சின்ன சின்ன குறிப்புகள் அவர்களுக்கு தெரியாது என்பதால் சற்று சிரமமாக இருக்கும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். சமயலையில் பயன்படுத்தக்கூடிய மிகவும் பயனுள்ள 12 சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக.

காபி தூள்

குறிப்பு 1:
காபி போடுவதற்கு பாலுடன் காபி தூளை நேரடியாக சேர்க்காமல், முதலில் தண்ணீருடன் சேர்த்து தனியாக கொதிக்க வைக்க காபியின் சுவை தண்ணீரில் நன்றாக இறங்கிவிடும். பின்னர் அதில் பாலை சேர்த்துக் கொதிக்கவிட்டால் காபி அருமையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது மூச்சு திணறும் அளவிற்கு நெடி அதிகமாக ஏற்படும். இதனை தவிர்க்க மிளகாயுடன் சிறிதளவு கல்லுப்பிணையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

dry-chilli-milagai

குறிப்பு 3:
தயிர் சீக்கிரம் புளிக்காமல் இருக்க சிறிய துண்டு இஞ்சியை தோலை நீக்கி நன்றாக தட்டி பின்னர் தயிரில் கலந்து வைத்தால் தயிர் சீக்கிரத்தில் புளித்து விடாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
ரவை, மைதா போன்ற உணவுப் பொருட்களை அதிக நாட்கள் வீட்டில் வைத்திருக்கும் பொழுது அவற்றில் எளிதாக பூச்சிகள், வண்டுகள் வந்து விடும். சிறிய வசம்புத் துண்டை தட்டி அவற்றுடன் போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் வராமல் தவிர்க்க முடியும்.

idli-rava

குறிப்பு 5:
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். காய்கறி வேக வைத்த தண்ணீர், காய்கறி கழுவிய தண்ணீர் இவற்றை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் அது செடிகளுக்கு மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்தாக அமையும்.

- Advertisement -

குறிப்பு 6:
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டிகளாகிவிடும். இதனை தவிர்க்க காம்புடன் இருக்கும் பச்சை மிளகாயை பெருங்காய டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

குறிப்பு 7:
பாஸ்மதி அரிசியை குக்கரில் வைத்து வேக வைக்கும் பொழுது சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.

குறிப்பு 8:
முட்டைகோஸின் தண்டை தூக்கி எறியாமல் அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொண்டு சாம்பார் வைக்கும் போது அதனுடன் சேர்த்து சமைத்தால் நல்ல சுவையில் இருக்கும்.

குறிப்பு 9:
பால் கொழுக்கட்டை செய்யும்பொழுது கொழுக்கட்டை உடையாமல் இருப்பதற்கு மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு 10:
பச்சை மிளகாயின் காம்பை நீக்கி விட்டு நிழலில் உலர்த்தி வைத்தால் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். அதே போல சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சப்பாத்தி மாவு கையில் ஒட்டாமலிருக்க சிறிதளவு தூள் உப்பினை கையில் தடவிக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 11:
சீடையை எண்ணெயில் சேர்த்து பொரிக்கும் பொழுது அவைவெடிக்காமல் இருக்க, சீடையை ஒரு முறை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும். அதே போல நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதனுடன் சிறிதளவு வெல்ல துண்டினை சேர்த்து வைத்தால் போதும்.

குறிப்பு 12:
காய்கறிகளை வேக வைப்பதற்கு அவற்றிற்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிகமான தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடும்.

- Advertisement -