கிலோ கிலோவா வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கணுமா? இனி சிரமப்படாதீங்க இப்படி செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷம் கூட ஆகாது! எல்லோருக்கும் பயனுள்ள சமையல் குறிப்பு 5!

onion-vellam
- Advertisement -

நாம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்கள் நீண்ட நாட்கள் உழைக்கவும், கெட்டுப் போகாமல் இருக்கவும் இந்த சில குறிப்புகள் நமக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். மேலும் கிலோ கிலோவாக வெங்காயத்தை நறுக்க இனி கத்தி, அரிவாள்மனை போன்றவற்றை தேட வேண்டாம். உங்கள் வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! எவ்வளவு வெங்காயம் இருந்தாலும் நமக்கு மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி தள்ள அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. எல்லோருக்கும் பயனுள்ள சூப்பரான சமையல் குறிப்புகள் 5? என்னவென்று பார்ப்போம்.

Tip 1:
இப்படி செஞ்சா கிலோ கிலோவா வெங்காயம் இருந்தாலும் ஐந்து நிமிடத்தில் மெல்லியதாக பிரியாணிக்கு நறுக்குவது போல நீளவாக்கில் நறுக்கலாம். கேரட் துருவும் துருவலில் உருளைக்கிழங்கு சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ் போன்றவை செய்வதற்கு மெல்லிய பிளேடு ஒன்று கொடுத்திருப்பார்கள். வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொண்டால், இந்த பிளேடில் லேசாக தேய்த்தால் போதும் பச்சடிக்கு செய்வது போல மெல்லியதாக நீளவாக்கில் சரசரவென நொடியில் நறுக்கி தள்ளலாம். கைகளை கொண்டு உதிர்த்து விட்டால் உதிர்ந்து விடும், இதனால் அதிக நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

- Advertisement -

Tip 2:
பெரிது பெரிதாக இருக்கும் மண்டை வெல்லங்களை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் பராமரிக்க முடியாது. அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது பாகுக் காய்ச்சி நன்கு வடிகட்டி அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்தாலும் ஆறு மாதத்திற்கு மேல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும் கெட்டுப் போகாது.

Tip 3:
சர்க்கரை, தேன், வெல்லம் போன்ற இனிப்பு பொருட்கள் இருக்கும் இடங்களில் எறும்புகள் அதிகம் தொல்லை செய்து கொண்டிருக்கும். தேன், சர்க்கரை டப்பாக்களில் நாலைந்து மிளகுகளை லேசாக இடித்து போட்டு விடுங்கள். அதன் வாசத்திற்கு ஒரு எறும்பு கூட அதன் பக்கம் செல்லாது. தேனில் மிளகு போடுவதால் நீண்ட நாட்கள் கெட்டியாகாமல், பிரெஷ்ஷாக கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

Tip 4:
முட்டையை சராசரியாக 9 நிமிடம் வேக வைத்தால் போதும். முட்டையை வேக வைப்பதற்கு முன்பு தண்ணீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள். பபுள்ஸ் வர ஆரம்பித்ததும் முட்டைகளை சேர்க்க வேண்டும். முட்டைகளை சேர்த்த பின்பு அரை மூடி பயன்படுத்திய சாறு இல்லாத எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடன் கால் ஸ்பூன் உப்பு போட்டு வேக வையுங்கள். முட்டை வேக வைக்கும் பாத்திரத்தின் ஓரத்தில் படியும் விடாப்பிடியான கரையும் இப்படி செய்வதன் மூலம் நீங்கிவிடும். முட்டையும் உடைந்து வெளியில் வராமல் சீராக, சரியாக வேகும்.

Tip 5:
புதிதாக வாங்கிய ஸ்டீல் ஸ்கிரப்பர் சிறிது நாட்களிலேயே சிறு சிறு துண்டுகளாக தேய்க்க தேய்க்க வந்து விடுகிறது என்றால் இப்படி செஞ்சி பாருங்க. ஸ்டீல் ஸ்கிரப்பர் சீக்கிரம் துரு பிடிக்காமல் இருக்கவும், நீண்ட நாட்கள் உபயோகிக்கவும் வெதுவெதுப்பான தண்ணீரில் பாத்திரம் கழுவும் லிக்விட் அல்லது நீங்கள் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் ஷாம்பு சிறிதளவு சேர்த்து கொதிக்க விடுங்கள். பின்னர் ஸ்டீல் ஸ்க்ரப்பர்களை அதில் மூழ்குமாறு போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து பயன்படுத்தலாம். இப்படி செய்தால் நீண்ட நாட்கள் இரும்பு நார் உடைந்து உதிராமல், துரு பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -