ஒரு துண்டு தேங்காய் கூட சேர்க்காமல் வேர்கடலை சட்னியை 5 நிமிடத்தில் இப்படி கூட செய்யலாமோ?

peanut-chutney0
- Advertisement -

சட்னி வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் சட்னி ‘வேர்க்கடலை சட்னி’. வேர்க்கடலையை வெறும் வாயில் சாப்பிட்டாலே நமக்கு அவ்வளவு பிடிக்கும். அதைச் சட்னி அரைத்து கொடுத்தால் வேண்டாம் என்றா கூற போகிறோம்? அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வேர்க்கடலை சட்னி தேங்காய் சேர்க்காமல் ஐந்து நிமிடத்தில் சட்டென அவசர நேரத்தில் இப்படி கூட செய்யலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

peanut

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை. பாதாம், முந்திரி எல்லாம் வாங்கி சாப்பிடும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் கூட தினமும் ஒரு கைப்பிடி அளவிற்கு வேர்க்கடலை சாப்பிட்டால் நிறைய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பூமிக்கு ஆடியில் கிடைக்கக் கூடிய இந்த பொக்கிஷம் மாமிசம், முட்டை, காய்கறிகளை விட அதிக அளவில் புரதச் சத்தை கொண்டுள்ளது.

- Advertisement -

கொட்டை வகைகளில் சேர்க்கப்படும் இந்த வேர்கடலை சீனா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, அமினோ அமிலங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கும் அற்புத சக்தி படைத்துள்ளது வேர்கடலை! வேர்க்கடலை துவையல் அல்லது சட்னி இப்படி செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

verkadalai

‘வேர்க்கடலை சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – முக்கால் கப், வெங்காயம் – 1, வர மிளகாய் – 6, புளி – நெல்லிக்காய் அளவிற்கு, சமையல் எண்ணெய் – 5 டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவிற்கு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை அளவிற்கு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

‘வேர்கடலை சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். 3 டீஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். கடலை எண்ணெய் ஊற்றினால் இன்னும் சூப்பராக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் வர மிளகாய்களை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து நன்கு ஆற விட வேண்டும்.

peanut-chutney1

வெங்காயம் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து தாளித்தால் வேர்க்கடலை துவையல் ரெடி ஆகி விடும். தண்ணீர் சேர்த்து சட்னி போலும் செய்து கொள்ளலாம். பின்னர் அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சூடானதும் 2 டீஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.

peanut-chutney

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை என்பதால் பெருங்காயத் தூள் கொஞ்சம் சேர்த்து தாளிப்பது மிகவும் நல்லது. சட்னியுடன் தாளித்த பொருட்களை சேர்த்து கலக்கி சுட சுட இட்லி, தோசையுடன் பரிமாறினால் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று கேட்கத் தோன்றும் வேர்க்கடலை சட்னி நீங்களும் இந்த முறையில் வீட்டில் செய்து அசத்துங்கள்.

- Advertisement -