தக்காளி சாதத்தை இப்படி செய்ததுண்டா? ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க சட்டியில சாதமே மிஞ்சாது!

thakkali-tomato-rice-tamil
- Advertisement -

தக்காளி சாதம் விதவிதமான வகைகளில் செய்யப்படுவது உண்டு. சாதாரணமாக தக்காளியை தொக்கு போல வதக்கி, அதில் சாதத்தை சேர்த்து கிளறி வைப்பதும் உண்டு. அப்படி அல்லாமல் பிரியாணிக்கு கிண்டுவது போலவும் கிண்டுவது உண்டு. இந்த இரண்டுமே இல்லாமல் ரொம்ப எளிமையாக அருமையான சுவையில் தக்காளி சாதம் ரெசிபி செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – நான்கு, பெரிய வெங்காயம் – இரண்டு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, வரமிளகாய் – நான்கு, கருவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – அரை கைப்பிடி, புதினா இலை – அரை கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் ரெண்டு ஆழாக்கு அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சமையல் எண்ணெயை விடுங்கள். பின்னர் கடுகு போட்டு தாளித்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுப்பட்டதும் சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் காரத்திற்கு பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

ரெண்டு நிமிடம் லேசாக வதக்கியதும் மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து, நன்கு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கியதும், வெட்டி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு வதக்குங்கள், சீக்கிரம் வதங்கும்.

- Advertisement -

இவை மசிய வதங்கிய பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, அரை கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளை சேர்த்து வதக்குங்கள். இவை சுருள வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து மசாலா வாசம் போக வதக்கி விடுங்கள். பின்னர் கடைசியாக அரை கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லியை நறுக்கி தூவிக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த அரிசி பாஸ்மதி என்றால் ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒன்றரை ஆழாக்கு தண்ணீர் சேர்த்தால் போதும்.

இதையும் படிக்கலாமே:
மைசூர் சட்னி செய்வது எப்படி?

சாதாரண அரிசி என்றால் ஒரு ஆழாக்கு அரிசிக்கு 2 ஆழாக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து ஊற வைத்துள்ள அரிசியை இதில் சேர்த்து குக்கரை மூடி விடுங்கள். மூன்று விசில் விட்டு எடுத்தால், மணக்க மணக்க சூப்பரான தக்காளி சாதம் ரெடி! நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, உங்களுக்கும் இந்த தக்காளி சாதம் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -