5 நிமிஷத்துல டக்குனு இந்த மைசூர் சட்னியை அரைச்சு பாருங்க. நல்ல மொறு மொறுன்னு தோசையோடு இதையும் வெச்சி சாப்பிட்டா தோசை போதும்ன்னு சொல்லவே மாட்டீங்க.

- Advertisement -

இட்லி தோசைக்கு நாம் எப்போதும் அரைக்கும் தேங்காய், வேர்க்கடலை சட்னி போல் அல்லாது இந்த வித்தியாசமான ரொம்பவே ருசியான மைசூர் சட்னியை ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்க. இனி இட்லி தோசை செஞ்சாலே இந்த சட்னியை தான் செய்வீங்க. அப்படி ஒரு சூப்பரான சட்னி ரெசிபியை தான் நாம எப்படி செய்யணும் தெரிஞ்சுக்க போறோம்.

தேவையான பொருட்கள்

வெள்ளை எள் -1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் -1 காய்ந்த மிளகாய் – 8, பூண்டு பல் – 6, புளி சின்ன எலுமிச்சை பழ அளவு, உப்பு – 1/2 டீஸ்பூன், உடைச்ச கடலை -1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1கொத்து, எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி அரைக்க முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் புளியையும் காய்ந்த மிளகாயும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் எள்ளை சேர்த்து லேசாக வருத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து லேசாக வதங்கிய பிறகு, பூண்டு பல், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதை சிறிது நேரம் ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் ஆற வைத்த வெங்காயம் இவையெல்லாம் சேர்த்த பிறகு தேங்காய், உடைத்த கடலை நாம் ஏற்கனவே ஊற வைத்து புளி காய்ந்த மிளகாய் அரை ஸ்பூன் உப்பு தேவை அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு அரைத்து எடுத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள். சுவையான மைசூர் சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை ஸ்பெஷல் சால்னா செய்முறை

இதை அப்படியே நீங்கள் தோசையின் மீது போட்டு கார தோசை போல சாப்பிடலாம் அல்லது தாளித்து ஊற்றியும் சாப்பிடலாம். ஆனால் நல்ல மொறு மொறு என்று தோசை ஊற்றி அதன் மேல் இந்த சட்னியை லேசாக தடவி அப்படியே கொஞ்சம் நெய் ஊற்றி ஒரு புறம் மட்டும் வேகவிட்டு திருப்பாமல் தோசையை எடுத்து சாப்பிட்டு பாருங்க சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும் மிஸ் பண்ணாம கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -