வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்து நல்ல செல்வ நிலையை அடைந்து செல்வதிபதியாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் இந்த திசையில் தான் படுத்து தூங்கி எழ வேண்டும்.

dhakshanamurthy sleeping
- Advertisement -

நம்முடைய வாழ்வியல் முறைகளில் ஒவ்வொன்றுக்கும் சாஸ்திரம் பல வழிமுறைகளை வைத்திருக்கிறது. உண்ணும் திசை, உறங்கும் திசை, படிக்கும் திசை என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வகுத்து கொடுத்திருக்கிறது. அதன்படி நாம் பயணித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வரும் பெரும் துன்பங்களில் இருந்து தப்பித்து விடலாம் என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் ஒரு மனிதன் எந்த திசையில் படுத்தால் அவருடைய வாழ்க்கை நிலை மேம்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தூங்கும் போது தலை வைத்து படுக்க கூடாத திசை
முதலில் எந்த திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்பதையும் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதாவது வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. வடக்கு திசையானது பெருமாளுக்கும் குபேரருக்கும் உகந்த திசை தான் ஆனால் வடக்கில் தலை வைத்து படுத்து நாம் எந்த எழும் பொழுது தெற்கை நோக்கி எழுவோம் தெற்கானது தட்சிணாமூர்த்திக்கான திசை.

- Advertisement -

தக்ஷிணாமூர்த்தியும் கடவுள் தானே பின் ஏன் அதை பார்த்தவாறு நாம் எழும்பக் கூடாது என்ற கேள்வி எழலாம். அதாவது நாம் இறந்த பின்பு நம்முடைய ஆன்மா ஆனது தெற்கு நோக்கி பயணிக்கும் அப்போது அந்த ஆன்மா தக்ஷிணாமூர்த்தி சரணடைந்து புனிதமாகும் என்பது தான் ஐதீகம். எனவே தான் இறந்தவர்களை வடக்கில் தலை வைத்தும் தெற்கில் கால் வைத்தும் படுக்க வைத்திருப்பார்கள். இதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மா நேரடியாக அவரை சென்றடையும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் நாம் தினமும் வடக்கில் தலை வைத்து தெற்கு நோக்கி பார்த்து எழும் போது நமக்கு அது நல்லது அல்ல என்று சொல்லப்படுகிறது.

அதுவே வடக்கில் பெருமாளும் குபேரரும் இருப்பதால் தெற்கில் தலை வைத்து வடக்கு நோக்கி எழுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. பெருமாள் குபேரர் இருவருமே பணத்திற்கான அதிபதிகள். அதுமட்டுமின்றி எப்படி இறந்த உடலின் ஆன்மா தெற்கு நோக்கி பயணிக்கிறதோ அதே போல் உடல் ஆனது வடக்கு நோக்கி பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் நாம் தினமும் வடக்கு நோக்கி எழும் பொழுது நம் தேக ஆரோக்கியம் மேம்படுவதுடன், நல்ல சிந்தனைகள் நல்ல எண்ணங்கள் உருவாதுடனும் இந்த இருவரின் திசையில் நாம் எழும் பொழுது நமக்கான செல்வ செழிப்புமிக்க வாழ்க்கையும் கிடைக்கும் என்பது தான் ஐதீகம்.

வடக்கு புறமாக தலை வைத்து படுக்கக் கூடாது என்பதற்கு அறிவியல் சார்ந்த பல விஷயங்கள் உண்டு அது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்பதற்கான ஆன்மீக காரணம் இது தான். அறிவியலாகட்டும் ஆன்மீகம் ஆகட்டும் இந்த திசையில் தலை வைத்து படுப்பது நமக்கு நல்லதல்ல என்ற ஒரே கருத்தை தான் சொல்கிறது என்பதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் தேவையில்லாமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால். இவர்களிடம் ஒரு முறை பணத்தை கொடுத்து வாங்குங்கள். இனி ஒரு ரூபாய் கூட உங்க கையில இருந்து அனாவசியமாக செலவு ஆகாவே ஆகாது.

வாழ்க்கையில் நாம் நல்ல ஆரோக்கியத்தோடு செல்வ நிலையை அடைந்து மேலும் மேலும் உயர இந்த திசையை பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு என்பது இதன் மூலம் நமக்கு புலப்படுகிறது. இந்த பதிவில் உள்ள கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருப்பின் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -