உங்கள் விருப்பங்கள் நிறைவேற, செல்வ வளம் பெருக இதை செய்தால் போதும்

honey

தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. இது மனிதர்களுக்கும் பல வகைகளில் பொருந்துகிறது. துறவிகளை தவிர்த்து, உலகியல் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் தனித்து இருந்தால் வாழ்வில் பலவித சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. இதைத் தவிர்ப்பதற்காக நமது முன்னோர்கள் உருவாக்கியது தான் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறையாகும். ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் சொந்த குடும்பம் அனைத்திலும் பக்கபலமாக இருக்கின்றது. அப்படியான குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நலம் பெறவும் சிறப்பான வாழ்க்கை அமையவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

family

இல்லற வாழ்வு ஏற்பட்டு அனைவரும் தங்களின் சொந்த நலனை காட்டிலும் தங்களின் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் நடத்தையில் அதிகம் விரும்புவார்களாக மாறுகின்றன. அப்படி தங்களுக்கும் தங்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் பல நன்மைகளை தரக்கூடிய இந்த பரிகாரத்தை திட சித்தத்தோடு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.

ஒரு சுத்தமான மாதுளம் பழத்தை அறுத்து மாதுளம் முத்துக்கள் அனைத்தையும் உதிர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் அவற்றை போட்டு, அதில் சுத்தமான தேனை ஊற்றி நன்கு கலந்து உங்கள் வீட்டு பூஜையறையில் உங்கள் இஷ்ட தெய்வ படத்திற்கு முன்பாகவோ அல்லது மகாலட்சுமி படத்திற்கு முன்பாகவே நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் அந்த மாதுளம் தேன் கலந்த சாதத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உண்ண கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் செய்வது நல்லது. அப்படி தினமும் செய்ய முடியாதவர்கள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.

mahalakshmi

இந்த பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வத்தின் அருள் மற்றும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைத்து குடும்பத்தில் இருப்பவர்களின் அனைவரின் வாழ்விலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். தீராத நோய்கள் விரைவில் தீரும். பிள்ளைகள் கல்வி, கலைகளில் சிறப்பான தேர்ச்சியையும், புகழையும் பெறுவார்கள். பொருளாதார கஷ்டங்கள் நீங்கி செல்வச் சேர்க்கை உண்டாகும். திருமண வாழ்க்கை இனிமையானதாக மாறும். வாழ்வில் நியாயமான விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Family wellness pariharam in Tamil. It is also called as Kudumba valkai in Tamil or Selvam peruga pariharam in Tamil or Mahalakshmi kadatcham in Tamil or Eliya pariharangal.