இந்த 1 பொருளை 10 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் செடிகளுக்கு ஒரே ஒரு ஸ்பூன் வைத்தால் கூட ஒரே கிளையில் 20 மொட்டுக்கள் கூட துளிர்க்கும்!

rose-plant-fish-fertilizer
- Advertisement -

ஒரு செடியில் அதிக மொட்டுக்கள் விடுவதற்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்து அவசியம் ஆகும். தகுந்த ஊட்டச்சத்து கிடைக்க பெறாத செடிகள் குறைந்த அளவிற்கு மொட்டுக்களே நமக்கு கொடுக்கும். வீட்டில் வளர்க்கும் ரோஜா செடி முதல் மற்ற எல்லா வகையான பூ செடிகளுக்கும் தகுந்த ஊட்டச்சத்து கொடுத்தால் ஒரே கிளையில் 20 மொட்டுக்கள் கூட கொத்துக் கொத்தாக பூக்கும். ஒரே கிளையில் அதிக மொட்டுக்கள் விடுவதற்கு இந்த ஒரு உரத்தை ஒரு ஸ்பூன் வைத்தால் போதும். அது என்னவென்று? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

uram4

ஒரு சில பூச்செடிகள் வாங்கிய உடன் அதிலிருக்கும் மொட்டுகள் மட்டுமே நன்கு செழித்து வளரும். அதற்குப் பின் அதில் ஒரு மொட்டு கூட துளிர்காமல் போய்விடும். ஆசையாக வாங்கிய செடியில் மொட்டுக்கள் முளைக்காமல் போக என்ன காரணம்? என்று தெரியாமல் இருப்போம். அதிலும் ரோஜா போன்ற செடிகள் வளர்ப்பவர்களுக்கு கட்டாயம் இந்த பிரச்சனை இருந்திருக்கும். முதல் முதலாக செடி வளர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே சந்தித்து இருப்பார்கள்.

- Advertisement -

நாம் வைக்கும் செடியில் இருக்கும் மண்ணினுடைய வளம் செடியின் வளர்ச்சியை சென்றடைகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற மண்ணின் வளத்தை அதிகரிக்கக் கூடிய முதன்மை சத்துக்கள் அனைத்தும் மீன் உரம் என்று சொல்லக்கூடிய(fish meal fertilizer) இந்த ஒரு உரத்தில் முழுமையாக அடங்கியுள்ளன. தாவரங்கள் செழிக்க தேவையான அத்தனை முதன்மை சத்துக்களும் இந்த மீன் உரத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

fish-fertilizer

இந்த மீன் உரமானது உரக்கடை அல்லது இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். இதன் விலையும் ஒரு கிலோ 200 ரூபாய் முதல் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு முறை வாங்கி வைத்து விட்டால் வீட்டில் இருக்கும் அத்தனை செடிகளும் நமக்கு அதிக அளவில் பூக்களை கொத்துக் கொத்தாக வாரிக் கொடுக்கும். காய், கனி செடிகளும் நிறைய காய் மற்றும் கனிகளை கொடுக்கும். மண்புழு உரம், தேங்காய் நார் உரம் போன்ற சைவ உரங்கள் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செடிகளுக்கு கொடுக்கலாம். ஆனால் இது போன்ற அசைவ உரங்களை 10 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்களுடைய பூச்செடிகளின் வேர்க் கால்களில் கைகளை கொண்டு லேசாக கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இந்த உரத்தை எடுத்து லேசாக எல்லா இடங்களிலும் தூவி விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தை தண்ணீர் தெளித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஒரே வாரத்தில் ஒரு கிளையில் மட்டுமே நிறைய மொட்டுகளை நமக்கு அந்த செடியானது கொடுக்கத் துவங்கும்.

plant-uram

செடிகளில் இருக்கும் பாதிப்பையும் இந்த உரம் நீக்கி விடும். இலை மற்றும் தண்டுகளில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன் வகைகளை நன்கு காய வைத்து தயார் செய்யப்படும் இந்த உரத்தை எல்லா வகையான பூச்செடிகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் அளவுக்கு மேல் இந்த உரத்தை கொடுக்க தேவை இல்லை. செடிகள் செழித்து நன்கு வளர ஆரம்பிப்பதை நீங்களே பார்க்கலாம். ரோஜா செடிகளுக்கு இதனுடன் அடிக்கடி வாழைப் பழத்தை ஏதாவது ஒரு வகையில் உரமாக செலுத்தி வந்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே
வெயில் காலத்திலும் கூட, உங்க வீட்டு ரோஜா செடி கொத்துக் கொத்தா பெரியபெரிய பூக்களை பூகணும்னா நாளையிலிருந்து மறக்காமல் 1 கப் இந்தத் தண்ணீர் ஊற்ற மறந்திடாதீங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -