பூஜை அறை, சமையலறையை அழகாக மாற்ற, சுலபமாக சுத்தம் செய்ய இனி 10 பைசா செலவு செய்ய வேண்டாமே!

provision-flex-pooja
- Advertisement -

நம் வீட்டில் பிரதானமாக பெண்கள் அதிகம் புழங்குவது சமையலறை தான். அந்த இடத்தில் தான் அதிகமான பொருட்களும் உண்டு. அதே போல பூஜை அறையும் மிகவும் முக்கியமானது. அங்கு சுத்தம் இருந்தால் தான் தெய்வ கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த இரண்டு இடங்களையும், சுத்தம் செய்ய மற்றும் அழகுடன் மாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பத்து பைசா செலவில்லாமல் இந்த இரண்டு இடங்களையும் நம்மால் சுலபமாக சுத்தம் செய்யவும், அழகுடன் வைத்திருக்கவும் முடியும். அது எப்படி? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pooja-room1

பூஜை அறையில் அதிகமாக குப்பை சேர்வது என்றால் அது காய்ந்து உதிரும் பூக்களும், விளக்குக்கு அடியில் கசியும் எண்ணெயும் தான் என்று கூறலாம். மேலும் படத்திற்கு வைக்கும் குங்குமம் மஞ்சள் போன்றவையும் உதிரும். இந்தக் குப்பையை அவ்வபோது எளிதாக அகற்றி நீக்கிவிட்டால் என்றென்றும் எப்போதும் பொலிவுடன் சுத்தத்துடன் காணப்படும். அதற்கு நீங்கள் நியூஸ்பேப்பர் பயன்படுத்தினால் சரி வராது. அதற்கு பதிலாக வேறு என்ன பயன்படுத்தலாம்?

- Advertisement -

வீட்டில் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் அதிகமான பொருட்கள் உண்டு. அங்கு சேரும் குப்பைகளும் அதிகம். தினந்தோறும் சமையல் செய்து கொண்டே இருப்பதால் அங்கு உணவு கழிவுகளும், தெறிக்கும் எண்ணெய் பிசுக்குகளும் சேர்ந்து நமக்கு அசுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன. இதை அடிக்கடி நாம் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் தூசுகள் படிந்து செய்வது என்பது கடினமான காரியமாக மாறிவிடும். இதற்கு சமையலறை மேடை மற்றும் சமையலறை பொருட்கள் வைக்கும் இடம், அலமாரிகள் ஆகியவற்றை சுலபமான முறையில் எப்படி பராமரிக்கலாம்?

oil-can1

எப்பொழுதும் எண்ணெய் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பயன்படுத்துவதை விட, கண்ணாடியிலான எண்ணெய் பாட்டில்கள் அல்லது எவர்சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் சுத்தம் செய்வதற்கும் சுலபமாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எண்ணெய் பொருட்களை மட்டும் தனியாக வைப்பதற்கு ஒரு ட்ரே வைத்துக் கொள்ளுங்கள். அதே போல அலமாரிகளிலும் பொருட்களை அடுக்கி வைப்பதற்கு இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள். இந்தப் பொருளை பயன்படுத்தினால் கீழே கசியும் எண்ணெய் பிசுக்குகள், விடாப்பிடியான கறைகள் கூட மிக எளிமையாக நீங்கிவிடும். இதனால் எப்பொழுதும் புத்தம் புதிதாக உங்களுடைய சமையல் அறை மற்றும் பூஜை அறையும் மின்னும். அது என்ன பொருள் ? என்று தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

மளிகை கடைகளில் அதற்காக தொங்கவிடப்பட்டிருக்கும் பிளக்ஸ் சீட்டுகள்(flex sheets) தான் அது. இது கடைகளில் விற்பனைக்கு கூட கிடைக்கின்றன. ஆனால் பத்து பைசா செலவில்லாமல் உங்களுக்கு தெரிந்த மளிகை கடையில் கேட்டு வைத்தால், மொத்தமாக கிடைக்கும். அவற்றை வாங்கி வந்து வைத்துக் கொண்டால் போதும் வருட கணக்கில் உங்களுக்கு பூஜை அறை மற்றும் சமையல் அறையில் பேப்பர் மற்றும் கவலையை இருக்காது. பிளக்ஸ் சீட்டுகள் பொறுத்தவரை மிகவும் வளவளப்பான மற்றும் பேப்பரை விட அடர்த்தியான தன்மையுள்ளது.

flex-sheet

எனவே நீங்கள் இதனை எல்லா அலமாரிகளிலும் போட்டு வைத்தால் எது சிந்தினாலும் ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து அல்லது காட்டன் துணியை வைத்து எளிதாக துடைத்து எடுத்து விடலாம். பூஜை அறையிலும் இதுபோல் ஒவ்வொரு அலமாரியிலும் போட்டு வைப்பது மிகவும் நல்லது. எண்ணெய்ப் பொருட்கள் வைக்கும் இடத்திலும் இதுபோல் செய்து வைத்துக்கொள்ளலாம். வேறு எங்கெல்லாம் உங்களுக்கு தேவையோ அங்கெல்லாம் இதேபோல பிளக்ஸ் சீட்டுகளை அடுக்கி வைத்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும், பயன்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கும், உங்களுடைய நேரமும் அதிக அளவில் மிச்சமாகும்.

- Advertisement -