உங்க வீட்டு ரோஜா மற்றும் பூச்செடிகள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்க முத்து முத்தான 6 குறிப்புகள் இதோ உங்களுக்காக!

rose-tomato-banana
- Advertisement -

நம் வீட்டு ரோஜா செடிகள் மற்றும் பூச்செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள இயற்கை உரத்தை நம் வீட்டில் வீணாக தூக்கி எறியும் பொருட்களில் இருந்தே நாம் கொடுக்க முடியும். பெரிது பெரிதான இலைகள் மற்றும் பூக்கள் கொடுக்க தேவையான சத்துக்கள் குப்பையில் எரியும் இந்த பொருட்களுக்கு உண்டு என்பது தெரியுமா? சமையல் கட்டில் இருந்து குப்பைக்கு செல்லும் முக்கியமான 6 விஷயங்கள் எப்படி நம்முடைய பூச்செடிகளை பூத்துக் குலுங்க செய்யும்? என்கிற தோட்டக்கலை ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குறிப்பு 1:
முதலில் நீங்கள் காலையில் எழுந்ததும் காபி, டீ அல்லது பால் ஏதாவது ஒன்றை போட்டு குடிப்பீர்கள் அல்லவா? இந்த பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பாலில் மற்றும் தேயிலையில் கூட சத்துக்கள் உண்டு. இதை வீணடிக்காமல் பாத்திரம் முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். காலையில் ஊற வைத்தால் மாலையில் இந்த தண்ணீரை வடிகட்டி செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். மெக்னீசியம், பொட்டாசியம் சத்துள்ள காபித்தூள், டிகாஷனை கூட நீங்கள் வீணடிக்காமல் கட்டிப் போயிருந்தால் இது போல தண்ணீரில் ஊற வைத்து பின்னர் செடிகளுக்கு கொடுக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
வாழைப்பழ தோல் மற்றும் எலுமிச்சை தோல் இவ்விரண்டு தோல் வகைகளையும் தூக்கிப் போடாமல் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் ஊற விட்டு மறுநாள் இந்த தண்ணீரை நீங்கள் உரமாக கொடுக்கலாம். இது மலர்களுக்கு நல்ல ஒரு அடர்த்தியான நிறத்தை கொடுக்கும்.

குறிப்பு 3:
முட்டை வேக வைத்த தண்ணீரில் அந்த முட்டை ஓட்டினை போட்டு ஆறு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். இதில் கால்சியம் முழுவதுமாக இறங்கிவிடும். அதன் பிறகு நீங்கள் இந்த தண்ணீரை முட்டை ஓட்டுடன் அப்படியே உங்களுடைய செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம். இதனால் செடிகளுக்கு கால்சியம் சத்து கிடைத்து நன்கு செழித்து வளரும்.

- Advertisement -

குறிப்பு 4:
வாழைப் பூ நீங்கள் வாங்கினால் மேலே இருக்கும் சிகப்பு தோலை உரித்து தூக்கி போடாமல் அந்த தோலை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நான்கு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டாமல் அப்படியே பூச்செடிகளுக்கு ஊற்றுங்கள் செடிகள் கொத்துக் கொத்தாக பூத்து தள்ளும்.

குறிப்பு 5:
அழுகிப் போன தக்காளியை வீணாக தூக்கி எறியாமல் அதை 2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு நாட்கள் வரை அப்படியே விட்டுவிட்டால் அதில் நுண்ணுயிரிகள் பெருகும். இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் உள்ளன. இந்த தண்ணீரை நீங்கள் வடிகட்டி செடிகளுக்கு கொடுத்தால் உங்களுடைய செடிகள் நன்கு செழித்து வளரும். மண்ணின் தரமும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
பனியில் உங்க செடியில் இலைகள் உதிர்கிறதா? பூச்சி தொந்தரவு அதிகமாக இருக்கிறதா? மசாலா டப்பாவில் இருக்கும் இந்த பொருளை இப்படி பண்ணுங்க பிரச்சனை உடனே தீரும்!

குறிப்பு 6:
வேக வைத்த வாழைக்காயில் இருக்கும் தண்ணீரை நாம் கீழே ஊற்றுவோம். இந்த தண்ணீரை வீணடிக்காமல் ரோஜா மற்றும் இதர பூச்செடிகளுக்கு ஊற்றி வந்தால், அயர்ன் சத்து கிடைக்கும். செடிகளுக்கு தேவையான அயன் சத்து இந்த தண்ணீரில் அதிகம் இருக்கிறது எனவே இதை அப்படியே நேரடியாக நீங்கள் செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம்.

- Advertisement -