வந்த துன்பம் எதுவாயினும் வந்த வழியே செல்வதற்கு, வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படித்தான் வழிபட வேண்டுமா? பெண்கள் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்!

durga-lemon-vilakku
- Advertisement -

திருமணத் தடை அகலவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் துர்க்கை அம்மனை பொதுவாக வழிபடுவது உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றுவது பரிகாரமாக பக்தர்களால் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வந்த துன்பம் எளிதில் நீங்கவும், மாங்கல்யம் பலம் பெறவும் துர்க்கை அம்மனை வீட்டில் எப்படி வழிபட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளிக் கிழமையில் ராகு கால நேரம் என்பது 10.30 மணி முதல் 12.00 மணி வரையிலான காலகட்டம் ஆகும். இந்த நேரத்தில் மனதார துர்க்கை அம்மனை முறையாக வழிபடுபவர்களுக்கு தீராத துன்பம் எல்லாம் தீர்வதாக ஒரு ஐதீகம் உண்டு. மற்ற எல்லா நேரங்களைக் காட்டிலும் இந்த ராகு கால நேரம் ஏற்றம் தரக்கூடிய அற்புதமான நேரமாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -

ராகு காலத்தில் நல்ல விஷயங்களை செய்வதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகள் தான் உண்டாகும். துர்க்கை அம்மன் உக்ரமான தெய்வம் என்பதால் பெரும்பாலும் வீட்டில் வைத்து வழிபடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் சிறு படமாக வைத்து துர்க்கை அம்மனை தாராளமாக வீட்டில் வழிபட்டு வரலாம். துர்க்கை அம்மனுக்கு நைவேத்தியமாக தேங்காய் சாதம் மற்றும் பாயாசம் ஆகியவற்றை படைப்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் என்பது மிகவும் உகந்த ஒரு தீபமாகும். இந்த தீபத்தை கோயில்களில் ஏற்றுவது முறையாகும், எனினும் வெள்ளிக் கிழமை ராகு கால வேளையில் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி மந்திரங்கள் எதுவும் சொல்லாமல் அதன் சாற்றை பிழிந்துவிட்டு உள்பக்கமாக மடித்து குழியாக உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த குழியில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்ற வேண்டும். இந்த இரண்டு எண்ணெகளைத் தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பஞ்சு திரி இட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் தீபம் ஏற்றி துர்க்கை அம்மன் ஸ்லோகங்களையும், மந்திரங்களையும் உச்சரிப்பது முறையாகும். 12 மணிக்குள் இந்த பூஜைகளை எல்லாம் செய்து முடித்து விட வேண்டும். இதை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நீங்கள் ராகுகால வேளையில் செய்து வந்தால் எந்த துன்பம் உங்களை நெருங்கி வந்தாலும், அது வந்த வழியே சென்று விடும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தாயாக இருக்கும் இந்த துர்க்கை அம்மனை பெண்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு மன தைரியம் பெருகும். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்து வருபவர்களுக்கு மாங்கல்ய பலம் நீடிக்கும். ஜாதக ரீதியாக இருக்கும் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஆரோக்கிய ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் மாங்கல்ய பலம் நீடிக்க வேண்டும் என்று நினைக்கும் திருமணமான பெண்கள் இந்த பூஜையை தொடர்ந்து செய்து வரலாம். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க, ஆரோக்கியம் அதிகரிக்க செய்ய கூடிய இந்த துர்க்கை அம்மன் வழிபாடு ரொம்ப விசேஷமான சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -